உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தென்சொற் கட்டுரைகள்

2. இரண்டாவது குறியை உணர்த்தும், பண்டைக்காலத்தில், வில்வீரர் ஒரு ரு மரத்திலுள்ள ஓரிலையைத் தேடி இலக்காக வைத்து எய்து பயின் றிருக்கின்றனர். பாஞ்சாலி மணத்தினும் இலக்கணை மணத்தினும், இலக்காக இடப்பட்ட மச்சம் இலைவடிவாயிருத்தல் காண்க. இக்காலத்தும் கல்லெறிவல்லார் ஓர் மரத்தினுள்ள காய்களையே குறிக்கொள்கின்றனர். அக்காலத்தில் வில்வீரர் இலைகளைக் குறிக் கொண்டமை இதனாலும் அநுமிக்கப்படும். இலையே காயினும் சிறிதாயும் நிலையானதாயு மிருத்தல்

காண்க.

3. மூன்றாவது குறிக்கப்பட்ட ஓர் இடத்தை உணர்த்தும். அதுகாலை லெக்கு என்று திரியும், இரண்டு, ரெண்டு என்றாற் போல, L. locus, a place, local, locality, location முதலிய சொற்கள் இதனின்றும் பிறக்கும். லெக்கு என்னுஞ் சொல் தென்னாட்டிற் பெருவழக்காய் வழங்குகின்றது.

4. நான்காவது குறிக்கப்பட்ட உதாரணத்தை உணர்த்தும்

5. ஐந்தாவது சித்திரத்தை உணர்த்தும். மக்கள் எழுத்தறியுமுன்னரே ஓவியம் அறிந்திருந்தனர். அழகு அனைவர் கண்களையும் கவர்தலின், ஆடை,சுவர் முதலியவற்றில், இலை கொடி முதலிய பல வடிவுகளை யெழுதிவந்தனர்.

“மாடக்குச் சித்திரம்” என்றார் பவணந்தியார். எத்துணையோ அறிவு வளர்ச்சி பெற்ற இக்காலத்தும் மரநுண்வினை (Wood Carving), உலோக நுண்வினை (Engraving), ஓவியம் (Drawing), கண்ணுள்வினை (Painting) முதலிய சித்திர வேலைகளெல்லாம் மரஞ்செடி, கொடி, இலை, பூ, காய், கனியாகவே யிருத்தல் காண்க. டைகளின் கரைகளெல்லாம் பெரும்பாலும் தாவர வடிவினவே. இதனாற் சித்திரம் இலைத்தொழிலென்றும் கூறப்படும். இலையென்பது ஏனை யுறுப்புகட்கும் இனவிலக்கணம் (உபலக்ஷணம்). “இலைமுகப் பைம்பூண்” என்றார் குமரகுருபரர். உலகப் பொருள்களில் தாவரம் போல் கண்கவர் கவின்பெறு காட்சியன வேறெவையுமில்லை. இதனாலேயே கொடி, கொடியிடை, குலக்கொடி, கொம்பு, கோதை, குலாமாலை, மலர்முகம் என மாதர் புகழப்படுவதும், திருவிழாக்களில் தோரணம் பந்தர் முதலியவை தாவரப் பொருள்களால் புனையப்படுவது மென்க.

6

இலங்கும் என்னும் வினை, சித்திரத்தை யுணர்த்தும் இலக்கு என்னும் பெயரினின்றும் திரிந்ததே.

இலங்குதல் விளங்குதல், இலக்கம் விளக்கம்.

6. ஆறாவது சித்திரவெழுத்தை (Hieroglyph or Picture Writing) யுணர்த்தும். இதுபோதுள்ள வரியெழுத்தேற்படுமுன் எல்லா நாடுகளிலும் சித்திர வெழுத்திள் மூலமாயே மக்கள் தத்தம் கருத்தை வெளியிட்டு வந்தனர். ஒரு சித்திரம் ஒரு வாக்கியத்தையாவது ஒரு செய்தியையாவது குறிப்பா லுணர்த்துவதாயிருந்தது.