உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இலக்கியம்', 'இலக்கணம்'

51

7. ஏழாவது வரியெழுத்தை யுணர்த்தும். சித்திரவெழுத்துத் தோன்றிச் சின்னூற்றாண்டின் பின் வரியெழுத்துத் தோன்றிற்று. அவ் வரியெழுத்தும் கூர்ந்து நோக்கின் தாவர வடிவே தாங்கி நிற்கும். சப்பானியம், சீனம் முதலிய மொழியெழுத்துகள் இக்காலத்தும் சித்திர வடிவே பெற்றுள்ளன.

எழுதுதல் என்னும் வினை படம் வரைதலையும் எழுத்தெழுது தலையும் பொதுவாயுணர்த்தும்.

எழுத்து இலக்கு (இலை) வடிவாயிருத்தலின் எழுதுதல் இலக்கித்த லெனப்பட்டது.

'இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே விருந்திலக்கித்

தவ்வுருவு நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்து”

(சீவக. 180)

என்னுஞ் செய்யுளில் இலக்கித்து என்பது எழுதி என்னும் பொருளில் வந்துள்ளது. இவ் வினையினின்றே லேககன், லேகினி, லிகிதம் முதலிய வடசொற்கள் பிறக்கும்.

இலக்கு, இலக்கி என்பன எழுது எனப் பொருள்படும் வினைப் பகுதிகள் அல்லது ஏவல் வினைகளாம்.

இலக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயராகவுமிருக்கும்; அது குபெயராய் எழுத்தை யுணர்த்தும்.

விகுதி.

Gk. logos = a word

a

a discourse

a treatise

a science

e.g: Theology, Physiology

இலக்கியம் என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர். இலக்கு பகுதி; இயம்

cf. கண் + இயம் = கண்ணியம்.

கண்ணுதல் = கருதுதல், மதித்தல்

இலக்கியம் என்பது தொழிலாகு பெயராய் எழுத்தையும், கருவியாகு பெயராய் நூல்களையும் உணர்த்தும், நூலுணர்த்துழி இருமடியாகு பெயர். cf. Literature from letter.

லக்கியத்தில் இயம் என்னும் விகுதியைத் தனிச்சொல்லாக்கிச் சாத்திரமெனப் பொருள் கூறல் ஈண்டுப் பொருந்தாது.

இனி, இலக்கணம் என்னும் சொல்லும் ஓர் விகுதி பெற்ற தொழிற்பெயரேயாம். இலக்கு பகுதி. அணம் விகுதி.

cf. கட்டு + அணம் = கட்டணம்