உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தென்சொற் கட்டுரைகள்

இலக்கணம், இலக்கியம் என்பன இரண்டும் முதன்முதல், எழுதும் தொழிலை யுணர்த்திப் பின்பு ஆகுபெயராய் எழுத்தை யுணர்த்தும். இலக்கியம் என்பது எழுத்தாலாய நூற்றொகுதியை யுணர்த்தினாற்போல, இலக்கணமென்பது எழுத்தாலாய மொழியின் ஒழுங்கை யுணர்த்தும்.

cf. Grammar from gramnos, (Gk.) a letters.

இனி, இலக்கணமென்பது மற்றோர் விகுதித் தொழிற் பெயர். இலக்கு பகுதி; அம் விகுதி. எண் இலக்க வடிவாய் அதாவது எழுத்து வடிவா யிருத்தலின் இலக்கமெனப்பட்டது.

எ-டு : தமிழ்

1

Latin I

1

25

V

T

5

X

10

7

L

50

8

C

100

10

D

D - 500

100

1000

M - 1000

இனி எண் என்னுஞ் சொல் தருக்கத்தை யுணர்த்துவது போல, அதன் பரியாயப் பெயராகிய இலக்கமென்பதும் தர்க்கத்தை யுணர்த்தும்.

Logic from Logos (Gk)

“ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பரின் புலவோர்" என்னுமடியில், எண் தருக்கத்தையும் எழுத்து இலக்கியத்தையும் (Literature) உணர்த்துதல் காண்க.

இதுகாறுங் கூறியவற்றால் இலக்கியம், இலக்கணம் என்னும் இருசொற்களும் இலக்கு என்னும் பகுதியடித் தொழிற்பெயர்களென்றும், அவை ஆகுபெயர் முறையான் முறையே நூற்றொகுதியையும் மொழி யொழுங்கையு முணர்த்துமென்றும், இலக்கு என்னுஞ் சொற்கு முதற்பொருள் இலையும் வழிப்பொருள் எழுத்து முதலியனவுமென்றும், இவையெல்லாந் தமிழேயென்றும், ஆரியத் தமிழ்க் கலப்பின் பின் தமிழினின்றும் ஆரியஞ் சென்ற எண்ணிறந்த சொற்களுள் இலக்கியம் இலக்கணம் என்பன இரண்டென்றும், இவை லக்ஷ்யம் லக்ஷணமென ஆண்டுத் திரியுமென்றும், இன்னும் இன்னோரன்ன பிறவும் வெள்ளிடைமலை போற் றெள்ளிதிற் கண்டுகொள்க.

குதிரை திருடினான் ஒருவன், நீதிபதி முன் குதிரை முகத்தை மூடி இதற்கு எக்கண் குருடென்ற உடையாற்கு, இடக்கண் குருடென்று அகப்பட்டாற் போல, எண்ணிறந்த தென்சொற்களைக் கவர்ந்துகொண்ட வடமொழியாளர், இச் சொற்கு மூலமென்னை யென்றோர் தமிழன் கடாவ, இதற்கு மூலமில்லை, இஃதோ ரிடுகுறியென் றகப்பட்டுக் கொள்கின்றனர்.