உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இலக்கியம்', 'இலக்கணம்’

இடுகுறிப்பெயரே தமிழ்க்கில்லை.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” 'மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா”

என்பவை தொல்காப்பியம்.

53

இடுகுறிப் பெயர் வடமொழியில் ஏராளம். பகுதியறியப்படாத தென்சொற்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இடுகுறியெனப்

பகர்ந்துவிடுவர்.

குதிரை திருடினான் குதிரையிடம் சென்றபோது, அது உடை யானைக் கண்டாற்போன் மகிழாமைபோல், வடநூலார் சில தென்சொற்குப் பகுதிப்பொருள் கற்பிக்கினும் அது சிறிதும் பொருந்தா தாகின்றது.

ஆகவே, மொழிநூலாராய்ச்சி வடசொல்லும் தென்சொல்லும் பகுத்துணர்தற்குச் சிறந்ததொரு கருவியாம். இதனையறிந்து கடைப்பிடிக்க.

- "தமிழ்ப்பொழில்" விடை 1934