உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LO

5

'இலக்கணம்', 'இலக்கியம்’ எம்மொழிச் சொற்கள்?

தமிழின் தாய்மையை வடவர் நெடுங்காலமாய் மறைத்துள்ளமை காரணமாக, ஒவ்வொரு தமிழ்ச்சொல்லையும் தமிழ்ச்சொல் லென்று காட்டுதற்கு அரும்பாடு படவேண்டியுள்ளது. அங்ஙனம் அரும்பாடுபட் டாய்ந்து தக்க சான்றும் ஏதுவுங் கொண்டு நாட்டியும், அதை நம்பாத பெருமை தமிழ்நாட்டிற்கே உள்ளது.

'இலக்கணம்', 'இலக்கியம்' என்ற இரு சொல்லும் தென்சொல்லே யென்று பல்லாண்டிற்கு முன்னரே பொழிலில் தக்க சான்றுகாட்டி நிறுவியிருக்கின்றேன். ஆயினும், அறிவாற்றலின்மையாலோ, அழுக்காற் றொடுகூடிய செருக்கினாலோ, பலர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆதலால், அதனை மீண்டும் மிக விளக்கமாகத் தெரிவிக்கத் துணிந்தேன்.

சிலர், சிறந்த தமிழறிஞராகவும் தமிழன்பராகவு மிருந்தும், தாம் வடமொழி பயின்றுள்ளமை காரணமாகத் தகையறத் தருக்கி, யான் கண்ட மொழிநூன் முடிவுகளை நம்பாததோடு தாக்கியும் வருகின்றனர். மொழியறிவு வேறு, மொழிநூலறிவு வேறு என்பதை இனிமேலாயினும் அவர் உணர்

வாராக.

இலக்கணம்', 'இலக்கியம்' என்ற இரு சொற்களும் தென்சொல்லா என்று ஆராயுமுன், அவற்றால் குறிக்கப்பெறும் இரண்டும் தென்மொழியி லுண்டா என்று காணல்வேண்டும். இலக்கணமும் இலக்கியமும் தொன்று தொட்டுத் தமிழுக்கு இருந்துவருவது மட்டுமன்றி, முதன் முதலாகவும் அவை நாவலந்தேயத்தில் எழுந்த மொழி தென்மொழியே என்பது மிகையன்று. இலக்கணமும் இலக்கியமும் தொன்றுதொட்டுத் தமிழுக்கு இருந்திருப்பின், அவற்றைக் குறிக்கச் சொல்லும் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். இதற்கு ‘இலக்கணம்’, ‘இலக்கியம்' என்ற இருசொல் தவிர வேறு தென்சொல்லுண்டா வெனின், எதுவு மில்லை.

சிலர், இலக்கியத்திற்குச் 'செய்யுள்' என்பதும், இலக்கணத்திற்கு 'நூல்' என்பதும் தமிழ்ப்பெயர் என்பர். செய்யுள் என்பது யாப்பு வடிவிற்குப் பெயர் என்பதைத் தொல்காப்பியர் யாப்பிலக்கணவியலுக்குச் செய்யுளியல் என்று