உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?

பெயரிட்டதையும், அவ் வியலின் முதல் நூற்பாவே மாத்திரை முதலிய உறுப்புகளையும், அம்மை முதலிய எட்டொடு கூட்டி,

நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென

வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே”

55

26

என்று கூறுவதையும், 127ஆம், 128ஆம் நூற்பாக்கள் செவியுறையும் அங்கதமும் பற்றிவரும் செய்யுள்களை முறையே செவியுறைச் செய்யுள் என்றும், அங்கதச் செய்யுள் என்றும் கூறுவதையும்,

"எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்”

"செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்'

"செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி”

(162)

(234)

(241)

என்ற பிறவிடத்தெல்லாம் ‘செய்யுள்' என்னும் சொல் யாப்பு வடிவத்தையே குறிப்பதையும்,

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் யாப்பின் வழியது என்மனார் புலவர்"

என யாப்பு என்று முன்னர்க் கூறியதையே,

&

எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்”

(78)

எனச் செய்யுள் என்று பின்னர் ஆசிரியர் பெயர் மாற்றிக் கூறியதையும், நூலுக்குரை செய்யுள் உரைநடை ஆகிய இரு வடிவிலும் பண்டைக் காலத் திருந்ததினால் அவற்றுள் ஒன்றான செய்யுள் வடிவுரையே எழுநிலத்துள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ள தென்பதையும், செய்யுள் உரைநடை ஆகிய இரண்டையும் தழுவியதே இலக்கியம் என்பதையும் நோக்கிக் காண்பாராக. காவியம் (Epic) தமிழில் தொடர்நிலைச் செய்யுள் எனப்பட்டதையும் காண்க.

செய்யுளைக் குறித்தற்கு யாப்பு, பா, பாட்டு முதலிய பிற பெயர்களு முண்டேயெனின், அவையெல்லாம் பருப்பொருளில் ஒருபொருட் சொல்லாயினும் நுண்பொருளில் வேறுபட்டவை என்பதை அறிதல் வேண்டும். அவ் வேறுபாடாவன:

யாப்பு = metrical composition செய்யுள் = poem, poetry பா = variety of metre.

பாட்டு

=

ode

தூக்கு = metrical rhythm.