உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தென்சொற் கட்டுரைகள்

செய்யுள் என்பது தனிப்பட்ட செய்யுளையும் (Poem), செய்யுட் டொகுதியையும் (Poetry), செய்யுள் நடையையும் குறிக்கும்.

செய்யுள் என்பது செய்யப்படுவது என்னும் பொருளையுடையது. செய், பகுதி; உள், விகுதி.

‘வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்”

என்றார் பவணந்தியார்.

poem அல்லது poetry என்னும் ஆங்கிலச்சொல்லும் இதே பொருளைக் கொண்டிருப்பது வியக்கத்தக்கது.

E. poem, (from) F. poeme, (from) L. poema, (from).

Gk. poema - poiema - poieo -

Gk. poiesis - poesis

= make.

making, poetry, E. poesy.

Gk. poietes - poetes = maker, poet, E. poet.

இனி, நூல் என்னுஞ் சொல்லை ஆராய்வாம். நூல் என்பது, ஒரு மொழியின் அல்லது கலையின் அல்லது வேறேதேனுமொரு பொருளின் ஒழுங்கை அல்லது இயல்பை எடுத்துக் கூறும் புத்தகத்தையும், அதன் பின்பு ஆகுபெயர்ப் பொருளில் அதுபற்றிய கலையையுங் குறிக்குமே யன்றி, அவ் வொழுங்கை அல்லது இயல்பையே குறிக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு மொழியின் ஒழுங்கைப்பற்றி வினவினால், அதன் இலக்கணமென்ன என்று கேட்பது முறையாகுமேயன்றி, அதன் நூல் என்ன என்று கேட்பது முறையாகாது. அது வழக்கு மன்று. இலக்கணம் என்பது grammar அல்லது definition என்றும், நூல் என்பது treatise என்றும் பொருள்படும். இவற்றுள், முன்னது இலக்கண நூலையும், பின்னது ஒரு நூலால் அல்லது நூற்றொகுதியால் உணர்த்தப்பெறும் அறிவுக் கலையையும் (Science) குறிக்கும்போது ஆகுபெயராம். logos என்னும் கிரேக்கச்சொல், முதலாவது சொல்லையே குறித்துப் பின்னர் ஆங்கிலத்தில் உரையாட்டையும் நூலையும் கலையையும் குறித்தமை காண்க. ஆயின், இப் பிற்பொருள்களில் அது logue என்றும் logg என்றும் திரிவதுடன், தொகைச்சொற்களின் ஈறாகவும் (suffix) மாறிவிடும். இலக்கணம் என்னும் சொல் நூலைக் குறிக்கும்போது மொழியிலக்கண முட்பட்ட எல்லாக் கலையிலக்கணங்களையும் கூறும் புத்தகங்கட்கெல்லாம் பொதுப்பெயர் என்றும் வேறுபாடு உணர்தல் வேண்டும்.

இனி, ஒருசிலர் புலம், இயல் என்ற சொற்கள் தமிழில் இலக்கணத்தைக் குறிக்கும் என்பர்.

புலம் என்னும் சொல்லின் இயற்பொருள் அறிவு என்பதே. இச்சொல்லின் அடிப் பிறந்த புலமை புலவர் என்ற சொற்களும்,