உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இலக்கணம்', ‘இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?

57

அறிவுடைமை அறிஞர் என்றே பொருள்படும். இத்தகைய பொதுச்சொல் மொழியிலக்கணத்தைச் சிறப்பாகச் சுட்டுதற்குப் பொருந்தாது.

'புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்”

என்று பனம்பாரனார் கூறியிருப்பினும், அது பிறரால் ஏற்றுக்கொள்ளப் பட்டதும் பெருவழக்காக வழங்கியதும் இல்லை. அறிவுநூல்களெல்லா வற்றையும் பொதுவாகப் புலம் என்பது செய்யுள் வழக்கம். “புலம்புரி யந்தணர்” என்னும் பரிபாடற்றொடரில் (6: 45) மறைநூல் புலம் எனப்பட்டது. இஃது ஓர் ஆகுபெயர். வேதம் என்னும் வடசொல்லுக்கும் அறிவு என்பதே இயற்பொருளாகும். (வித்(=அறி.) - வேதம்]. பனம்பாரனார் கூற்றில் உள்ள புலம் என்னுஞ் சொல், பொதுவாக அறிவு அல்லது அறிவுநூல் எல்லாவற்றையும் குறிப்பதாயினும், இடம் நோக்கிச் சிறப்பாக இலக்கணத்தை அல்லது இலக்கண நூலைக் குறிப்பதாகக் கொள்ளப்படும். ஆனால், இது ஆட்சிபற்றியதேயன்றி இயல்புபற்றியதன்று. இதனால் புலம் என்பது

இலக்கணப் பெயராகாது.

"

இனி, இயல் என்ற சொல்லோவெனின், அது எல்லாப் பொருளுக்கும் உரிய தன்மையை அல்லது இயல்பைப் பொதுப்படையாகச் சுட்டுவதன்றி வேறொன்றும் குறியாமையின், இலக்கணப் பெயராதற்கு எள்ளளவும் ஏற்றதன்றாம். இயல் = தன்மை. இயன்மொழி வாழ்த்து = ஒருவனுடைய சிறந்த தன்மைகளை எடுத்துக் கூறிப் புகழ்வது. இயல் இயல்பு, இயற்கை.

=

பிற மொழிகளில் இலக்கணம் தோன்று முன்பும், ஆரியர் வருமுன்பும் தொன்றுதொட்டும், தமிழில் இலக்கண, இலக்கியம் இருந்துவருவதுடன், இன்றும், தமிழில்தான், மொழிகளுக்கெல்லா பொருளிலக்கணமும் இருந்துவருகின்றது. இதனாலேயே,

Ce

பிற

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ'

என்று பரிந்துரைத்தார் பரஞ்சோதி முனிவர்,

மில்லாத

இனி, இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் வடமொழி வடிவான லக்ஷணம், லக்ஷ்யம் என்பவற்றிற்கு வடமொழியில், grammar, literature என்னும் பொருளுண்டா வெனின், அதுவுமில்லை. வடமொழியில் அவற்றின் பொருளாவன:

லக்ஷண = குறி, அடையாளம், இயல்பு, தன்மை, குணம், அழகு, (முதலியன).

லக்ஷ்யம் = குறிக்கப்பட்டது, வரையறுக்கப்பட்டது, வரணிக்கப் பட்டது, குறிக்கோள், நோக்கு, குறிக்கோளுடையது (முதலியன).