உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தென்சொற் கட்டுரைகள்

இவ் விரு சொற்களின் அடிப்படைக் கருத்தும் குறி என்பதேயாகும். ஆனால், இவற்றின் மூலம், ரஞ்ச்(ranj) என்பதன் திரிவான ரக்த (rakta) என்றும், லக் (lag) என்றும், இருவேறு வகையாகச் சொல்லப்படுகின்றது. ரஞ்ச் = வரணம் பூசப்பெறு, நிறங்கொள், விளங்கு, ஒளிர்.

ச் சொல் ரங் (rang) என்பதன் திரிபாகும்.

லக் = இசை, இணை, கட்டு, ஒட்டு.

இச் சொல், lego என்னும் கிரேக்கச் சொல்லுக்கும், ligne என்னும் இலத்தீன் சொல்லுக்கும் இனச் சொல்லாகும்.

லக்ஷண, லய என்னும் சொற்களுடன், லக்ஷம் (நூறாயிரம்), லக்ஷ்மன் அல்லது லக்ஷ்மணன், லக்ஷ்மீ முதலிய சொற்களும், வடமொழியில் தொடர்புறுத்தப்பட்டுள்ளன. லக்ஷ்மன், லக்ஷ்மணன்=சிறந்த குறிகளை அல்லது நல்லிலக்கணங்களை யுடையவன். லக்ஷ்மீ ம = நற்குறியை அல்லது அதிர்ஷ்டத்தை யுடையவள்; அதிர்ஷ்டசாலி அல்லது தெய்வம்.

லக்ஷ்மீ என்னும் சொல்லுக்குச் சிலர் லக் (lag) என்பதையும், சிலர் லஞ்ச் (lanj) என்பதையும், மூலமாகக் காட்டுகின்றனர். லஞ்ச் = ஒளிர், விளங்கு, திகழ்.

லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் இருசொற்களும், வடமொழியில் இலக்கணம் இலக்கியம் என்று பொருள்படாததோடு, இலக்கணம், இலக்கியம் என்னும் தமிழ்ச்சொற்களைப்போல, குறிப்பொருளையே அடிப்படையாகவும், விளங்குதற் பொருள் தரும் இலங்கு என்னும் சொல்லையே மூலமாகவும் கொண்டுள்ளன. இது மிகக் கவனிக்கத்தக்கது.

வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்க வ்யாகரணம் என்னும் சொல்லும், இலக்கியத்தைக் குறிக்கச் சாகித்யம் என்னும் சொல்லும் உள்ளன. தமிழிலோ இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்களைத் தவிர வேறெதுவுமில்லை. அஃதோடு, அவ் விரு சொற்களுக்கும் வேர் தமிழில்தான் உள்ளது. அஃதெங்ஙன மெனின், காட்டுவல்:

எழுச்சிப் பொருளை யுணர்த்தும் எகர வெழுத்தை அடியாகக் கொண்ட எல் என்னுஞ் சொல், எழுகின்ற அல்லது உதிக்கின்ற கதிரவனை யும் அதன் ஒளியையும் குறிக்கும்.

"எல்லே யிலக்கம்" என்பது தொல்காப்பியம் (இடை 21)

=

எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல்.

எல் - என்று = கதிரவன்.

என்று - என்றவன் = கதிரவன்

=

என்று – என்றூழ் என்றூழ் = கதிரவன் முதிர்ச்சி, கோடை.

எகரம் அல்லது ஏகாரம் எழுச்சிப்பொரு ளுணர்த்துவதை, எழு, எம்பு, எவ்வு, எக்கு, எடு, ஏண், ஏணி, ஏணை, ஏத்து, (ஏற்றிச்சொல்), ஏந்து, ஏல், ஏறு,