உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவென்னும் சொல் தென்சொல்லே

67

என்பதை Calcutta என்னும் ஆங்கில வடிவு வாயிலாய்க் கல்கத்தா என்றெழுதுவதும் போன்ற அறியாமையேயாகும். இதனால், சீகாளத்தி என்னும் வடிவினும் திருக்காளத்தி என்னும் வடிவே தக்கதாகும் என அறிக. இனி, திருவென்னுஞ் சொல்லையன்றிச் சிறுவென்னுஞ் சொல்லையும் ஸ்ரீ எனத் திரித்துள்ளனர் வடமொழியாளர். பெண்டிர்க்குச் சொந்தமாகவுள்ள சிறுசெல்வத்திற்கு அல்லது செல்வத்திற்குச் 'சிறுபாடு' என்றும் 'சிறுதனம்' என்றும் பெயர்.

சிறுதனந் தேடுவள்

99

(5600TL 6060.95)

வீட்டுச் செலவில் மீத்துவைக்கும் சிறு தொகைக்குச் 'சில்வானம்' என்று பெயர். ‘சிறுதனம்' என்பது பிற்காலத்தில் தனி வேற்று (private) நிதி எனப் பொதுப்படவும் பொருள் பெற்றது.

"உடையார்ஸ்ரீ ராஜராஜ தேவர் சிறுதனத்துக்

கொடுத்த” (S. I. I. ii, 3)

சிறுதனம் என்பது ஸ்ரீதனம், சீதனம் எனத் தவறாய் வழங்குகின்றது.

ஸ்ரீ என்பதைத் திருவென்றும், ஸ்ரீலஸ்ரீ என்பதைத் திருப்பெருந்திரு அல்லது திருமிகுதிரு என்றும், மகாராஜராஜஸ்ரீ என்பதை மகவரச வரசத்திரு அல்லது மாவரச வரசத்திரு என்றும், ராஜஸ்ரீ என்பதை அரசத்திரு என்றும் தமிழில் வழங்கல் வேண்டும். ம. (ரா). (ரா). ஸ்ரீ என்னும் முகவரியடையில், ஸ்ரீ என்பது தவிர மற்ற மூவெழுத்துகளும் தமிழ்ச் சொற்களின் முதலெழுத்துகளாயே யிருத்தலைக் காண்க. இதனால், ஸ்ரீ என்பது பின்னை வடிவ மென்பதை யோர்க.

சீர்காழி என்பதன் முதல் வடிவம் சீகாழி என்பர். சீர் என்னுஞ் சொல் செந்தமிழாயிருத்தலின், சீர்காழி யென்றே வழங்குவது நல்லது. இதற் கிசையாதார் திருக்காழி யென்றே வழங்குதல் வேண்டும்.

இனி, திருவென்னுந் தமிழ்ச்சொற்கு வேர்ப்பொருள் என்னையோ வெனிற் கூறுவேன்:

திருவென்பது தில் என்னும் வேரடியாய்ப் பிறந்து திரட்டப்படுவது அல்லது ஈட்டப்படுவது என்னும் பொருளது.

ஒ.நோ: தேட்டு (தேடப்படுவது)

=

செல்வம்.

தில் திர்

தில் > திர் தில்> திர்

தில் > திள்

திள்

^^^^ ^

> திரள் > திரளை

> திரணை.

> திரு.

> திரம்

> திறம்

> திறன்

>திறல்.

> திட்டு

திட்டை

> திறம்

> திறமை.

> திண்

> திண்ணை > திணை.

திண்

திண்ணம்.

திண்

> திண்டு.