உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

திட்டு

திட்டு

திட்டம்> திடம். திட்டல் திடல்.

தில்லுமுல்லு

> திண்டுமுண்டு.

தென்சொற் கட்டுரைகள்

தில் என்னும் வேர் முறையே திரட்சி, கட்டி, மேடு என்னும் பொருள்களையும் திரட்சிப் பொருளினின்று உறுதி, குழு, குளிர், வலிமை, அணை(மெத்தை) முதலிய பொருள்களையும் தருதலை மேற்காட்டிய திரிசொற்களாற் (Derivatives) காண்க. இனி, தில் என்னும் வேர்க்கும் மூலவேர் ஒன்றுள்ளது. அதை இங்கு விரிப்பிற் பெருகும்; சுருக்கின் விளங்காது. அதன் விளக்கத்தை எனது மொழிநூலின் முதன் மடல இரண்டாம் பாகத்திற் கண்டுகொள்க.

இதுகாறும் கூறியவற்றால், திரு என்பது தென்சொல்லே யென்றும், அதுவே வடமொழியில் ஸ்ரீ எனத் திரிக்கப்பட்டுள்ள தென்றும் தெள்ளத் தெளிய அறிக. ஸ்ரீ என்பதே செவிக் கினிய தென்று வடமொழியாளரின் அடியார் சிலர் கூறுவாராயின்,

66

நேர்நின்று

காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு'

99

எனக் கூறி விடுக்க.

"செந்தமிழ்ச் செல்வி" விடை 1943