உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

உதாரணமாக,

தென்சொற் கட்டுரைகள்

ஆ ங்கிலருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டானபின் Father(பாதிரி), Battalion(பட்டாளம்) முதலிய ஆங்கிலச் சொற்கள் தமிழிலும், LIGOTL (bandy), தோப்பு(tope) முதலிய தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்திலுமாகக் கலந்துள்ளன.

வடமொழியும் தென்மொழியும் ஐயாயிரம் ஆண்டுகளாக அடுத்தடுத்து வழங்கினமையின், ஏற்கெனவே இவ் விரண்டிற்குமுள்ள பொதுச் சொற்கள் நீங்கலாகப் புதிதாக ஒன்றினின்றொன்று கடன் கொண்டுள்ள சொற்கள் எத்துணையோ பலவாம். வடமொழியிலும் தமிழ்ச் சொற்கள் அல்லது திராவிடச் சொற்கள் உண்டென்பதைக் காலஞ்சென்ற கால்டுவெல், குண்டர்ட் என்னும் இருபெரு மொழிநூலாராய்ச்சியாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். இவருள் முன்னையவர் வடசொற்களையும் தென்சொற்களையும் பிரித்தறிவதற்கும் விதிகள் வகுத்திருக்கின்றனர். அவற்றுள் முக்கியமானவை இரண்டு. அவையாவன:

1. ஒரு சொல் எந்த மொழியில் பல்வேறு வடிவங்களுடனும் இனச்சொற்களுடனும் மூலப்பொருளைத் தாங்கிக்கொண்டு பெருவழக்காய் வழங்குகின்றதோ, அந்த மொழிக்கே அஃது உரியது என்பது.

2. வடமொழியிலும் தென்மொழியிலும் வழங்கும் ஒரு சொல் வடமொழியின் இனமான மேனாட்டு மொழிகள் ஒன்றிலுங் காணப்படாமல், தமிழின் இனமான மற்றெல்லாத் திராவிட மொழிகளிலுங் காணப்படுமாயின் அது தமிழுக்கே உரிய சொல்லாம் என்பது.

பிற

வடமொழி தேவமொழியென்றும், மொழிகளெல்லாம் தன்னிடத்திற் கடன்கொள்ளத் தான்மட்டும் ஒரு சொல்லும் பிற மொழி யினின்று கடன் கொள்ளாது தனித்தியங்கும் தூய்மை வாய்ந்த தென்றும் சில வடமொழிவாணர் பொய்யும் புலையும் மலிந்த புராணக் காலத்தன்றி, ஆராய்ச்சிமிக்க இக்காலத்தும் பிதற்றுவது, மிகவும் எள்ளிநகையாடத் தக்கதன்றி வேறு என் செயற்பாலது?

வடமொழி இக்காலத் தமிழிற் பெரிதுங் கலந்திருப்பதால் ஏற்கெனவே இவ் விரண்டிற்குமுள்ள பொதுச் சொற்களோடு, புதிதாய் வடமொழிக்குச் சென்ற தமிழ் அல்லது திராவிடச் சொற்களையும் வடசொற்களே யென்று நடுநிலை ஆராய்ச்சியில்லா வடமொழிப் பற்றினரெல்லாம் நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைகின்றனர். ஆங்கிலச் சொற்கள் நூற்றுக்கு முப்பது வீதம் இற்றைத் தமிழில் தெருப்பேச்சிற் கலந்திருப்பினும், நூல்வழக்கிற் கலந்திலது. அங்ஙனம்

ஒருகால் நூல்வழக்கிலும் கலக்குமாயின், பின்னர் ஆராய்ச்சியில்லாதார் all, beetle, crack, derive, ear, fear, galley. bail, in, jury, kill, locality, mess, near, one, put, quoth, roll, shrink, through, un, vain. want, yean, zenith என்ற ஆங்கிலச் சொற்களே முறையே எல்லாம், விட்டில், கிறுக்கு, திரி, ஏர், வெரு, கலம், ஆலி, இல், சூள் கொல், இலக்கு, மிசை, நெருங்கு, ஒன்று, போடு, கூறு, உருள், சுருங்கு, துருவ, அல், வீண்,

"