உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?

71

வேண்டு, ஈன், சென்னி என்னுஞ் சொற்களாகத் திரிந்துள்ளன என்று கூறுவரன்றோ? இங்ஙனமே வடசொற்களின் திரிபாகப் பல தூய தென்சொற்களைக் கூறுகின்றனரென்க.

"

இங்ஙனம் கூறுவோர் தமிழின் சொல்வளத்தையும் ஒருசிறிதும் நோக்குகின்றிலர். உண்மை என்னும் குணம் நினைவு, சொல், செயல் என்ற மூன்றையும் தழுவியது என்பதை உணர்த்தற்குத் தமிழில் உண்மை (உள் = மனம்), வாய்மை(வாய்), மெய்ம்மை (மெய் = உடம்பு) என மூவேறு சொற்கள் உள. மரத்தின் உறுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயர் உளது. இலையென்னும் ஒரே யுறுப்பிற்கு இலை, தாள், தோகை, ஓலை என நான்கு சொற்கள் உள்ளன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தன்மையைக் குறிக்கும். பூவின் வெவ்வேறு நிலைகளைக் குறித்தற்கு வெவ்வேறு சொற்கள் உள்ளன. முதலாவது தோன்றும்போது அரும்பு; பேரரும்பாயின் போது; மலர்ந்தபின் மலர்; விழுந்தபின் வீ ; வாடியபின் செம்மல். உள்ளத்தின் வெவ்வேறு தொழிற்கும் வெவ்வேறு சொல் உள. எ-டு: உள்(ளு), to will; உணர் to feel, to compre- hend; நினை, to think, to remember; நினைவுகூர், to remember, to com- memorate; உன்(னு), to imagine, (உன்னம் = imagination); எண்(ணு), to deliberate, to consider; கருது, to conceive (கருத்து = concept, idea); அறி, to know, கொள், to opine, (கோள் = opinion, கொள்கை = doctrine); மதி, to estimate, to regard; முன்(னு), to propose; முன்னிடு, to propose, to set before, (முன்னிட்டு = having proposed, having set before, for the purpose of); தீர்மானி, to determine, to resolve; நய, to appreciate; தெருள், to perceive clearly. இங்ஙனம் தமிழிற் பல பொருளும் பற்றிப் பல சொற்களிருப்பவும் இவற்றைக் கவனியாதும், இவற்றின் நுட்பவேறுபாடுகளை ஆராயாதும், இவற்றுட் சிலவற்றை வடசொல்லென மயங்கியும், தமிழிற் பொருளுணர்த்தப் போதிய சொல்லில்லை யென்று பழித்துத் திரிவர்.

இவற்றுள், மதி யென்னுஞ் சொல் எல்லா மொழிகட்கும் பொதுவான மூலமொழிச் சொல்லாகும். அம் மூலமொழிக்குப் பிற மொழிகளினும் தமிழ் மிக நெருங்கியதென்பது மொழிநூல் ஆராய்ச்சியால் விளங்கும். இதுபற்றிக் கால்டுவெல் ஐயரும் பின்வருமாறு கூறுகின்றார். (எவரும் எங்ஙனமும் ஐயுறாமைப் பொருட்டு அவர் கூற்றின் மூலத்தையே மொழிபெயர்க்காது) இங்குத் தருகின்றேன்.

"Nevertheless, I regard the comparison of words, when care- fully and cautiously conducted, as an important help to the determina- tion of lingual affinities, and it will be found, I think, that the following vocabularies bear independent testimony, in their own degree, to the same result at which we arrived by grammatical comparison viz. that