உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தென்சொற் கட்டுரைகள் the Dravidian idioms exhibit traces of an ancient, deep-seated connec- tion with pre-Sanskrit the assumed archaic mother-tongue of the Indo- European family, whilst at the same time the traces they exhibit of relationship to the languages of the Scythian group, especially to the Ugrian tongues, are on the whole, closer, more distinctive, and more essential.”

- (Comparative Grammar of the Dravidian Languages, p. 452). மேற்கூறியவாறே காலத்தைக் குறிப்பதற்கும் தமிழிற் பல சொற்களுள. அவை கால், பொழுது, வேளை, கொன், செவ்வி, அற்றம், ஏல்வை, சமையம், நேரம், ஞான்று, பதம் முதலியனவாம்.

இவற்றுள் கால் என்பது காலை, காலம் எனத் திரிந்து நெடுங் காலத்தையும் குறுங்காலத்தையும் குறிக்கும். ஏனையவெல்லாம் குறுங் காலத்தையே குறிக்கும். பொழுது என்பது போழ்து, போது எனத் திரியும். பெரும்பொழுது என்பது இரு மாதங்கொண்ட பருவத்தையும் (Season) சிறுபொழுது என்பது நான்மணி நேரங்கொண்ட நாட்பகுதியையுங் குறிக்கும். வேளை என்பது நாட்பகுதியைக் குறிக்கும்; செய்யுளில் வேலை என்றும் திரியும். கொன் என்பது உரிய தீய காலத்தையும், செவ்வி என்பது தகுந்த நற்சமையத்தையும், அற்றம் என்பது தகுந்த தீச்சமையத்தையும் குறிக்கும். ஏல்வை என்பது எல்வையென்றுங் குறுகும் சமையம் என்பது அமையமென்றும் திரிந்து, தகுந்த வேளையை அல்லது பருவமான நிலையைக் குறிக்கும். நேரம் என்பது ஒரு குறித்த நேரத்தையும் ஒரு வினை நிகழ்ச்சிக்குரிய காலத்தையும்(duration) குறிக்கும். பதம் என்பது ஒரு பொருளின் செவ்வையான நிலையைக் குறிக்கும். ஞான்று என்பது போது என்பதைப் போன்றது.

ஏல்

கால், காலை, பொழுது, வேளை, ஏல்வை, சமையம், நேரம், ஞான்று, பதம் என்னும் சொற்கள். வந்தகால், வந்தகாலை, வந்த பொழுது, வந்தவேளை என ஒரு குறித்த நேரத்தையுங் குறிக்கும்.

6

ஒரு நாளின் ஒளி இருள் வேளைகளைக் குறிப்பதற்குப் பகல் இரவு என்னுஞ் சொற்களும், ஒரு நாளிற் காலை 6 மணி முதல் நன்னான்கு மணி நேரமாகவுள்ள அறுவகைச் சிறுபொழுதுகளையுங் குறிப்பதற்குக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்னுஞ் சொற்களும் உள்ளன. வேலைக் காலத்தைக் கணிப்பதற்கு 24 நிமிட நேரங்கொண்ட நாழிகை என்னும் அளவுள்ளது.

ஒரு வாரத்தின் ஏழு நாள்களும் நாள்களும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி எனப்படும். இவற்றுள் அறிவன், காரி என்னும் இரண்டிற்கும் பதிலாகப் புதன், சனி என்னும் வடசொற்கள் வழங்கி வருகின்றன. வாரம், கிழமை என்பன உரிமை என்னும் ஒருபொருட்