உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?

73

சொற்கள். (காரி = கரியது. 'கரியவன்' என்று சிலப்பதிகாரத்துள்ளும்(10 : 102), 'மைம்மீன்' என்று புறநானூற்றுள்ளும்(117) வந்திருத்தல் காண்க. மை = கறுப்பு.)

=

இருவாரம் சேர்ந்தது ஒரு பக்கம் எனப்படும். இதையே பக்ஷம் என்பர் வடமொழியார். (“ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்து” சிலப். 23 : 133. பக்கம் = பகுதி; இருட்பக்கம் = கிருஷ்ண பக்ஷம்.)

இருபக்கம் சேர்ந்தது ஒரு திங்கள் (மாதம்).

இரு திங்கள் சேர்ந்தது ஒரு பெரும்பொழுது. சித்திரை முதல் பங்குனி யீறாக, இவ்விரு மாதமாய், முறையே, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பெரும்பொழுதுகளாகும். இவை மிகப் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருப்பதுடன் இன்றும் தமிழ்நாட்டிற்கே பொருந்துவனவா யுள்ளன. ஆகையால், இவற்றுக்கு வடமொழியிற் கூறும் பெயர்களெல்லாம் மொழிபெயர்ப்பே.

பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் பெயர்கள் வட சொற்களே. இவற்றுக்கும் பதிலாகப் பன்னீர் இராசிப்பெயர்களே மலையாள நாட்டிற்போல் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் இராசிப் பெயர்களில் மேடம்(மேழம்), இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்னும் ஏழும் தமிழ்ச்சொற்கள் அல்லது தமிழுக்கும் வடமொழிக் கும் பொதுவான சொற்கள். இவற்றுள் முதலாறுக்கும் முறையே தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்றும் பெயர்களுண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில் முறையே இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும். இராசிக்குத் தமிழில் ஓரை என்று பெயர்.

பன்னிரு மாதங்களும் இராசிப் பெயர் பெறுமாறு:

1. சித்திரை

"

மேடம் இடபம்

7. ஐப்பசி

8. கார்த்திகை

துலாம் விருச்சிகம்

மிதுனம் 9. மார்கழி

தனுசு

10. தை

11. மாசி

மகரம்

கும்பம்

மீனம்

2.

வகாசி

3.

ஆனி

4.

ஆடி

கடகம்

5.

ஆவணி

6.

புரட்டாசி

சிங்கம் கன்னி 12. பங்குனி

அசுவனி முதல் ரேவதி யீறான இருபத்தேழு நட்சத்திரங்கட்கும் தமிழிற் பெயருண்டு. அவை முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க.

"

ஆண்டு, முயற்சி, சொல், நஞ்சு, மகிழ்ச்சி, நோய், விருப்பம், ஊதியம், இழப்பு, வருத்தம், நிலா, ஆசிரியன், கோயில், நீர், முழுக்கு, குளிப்பு, சோறு,