உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?

83

ஓருயிர் மற்றோ ருயிராகத்திரிவது உயிரினத் திரிபாம். எந்த வுயிரும் வேறெந்த உயிராகவும் திரியலாம். ஆயினும், பெரும்பான்மையாக இயல்கின்ற சில முறைப்பட்ட உயிரினத் திரிபுகள் உள்ளன. அவற்றுள்

அ என்பது ஒன்று.

எ-டு: குடும்பு – கடும்பு

குடம் - கடம்

துணை தனை முடங்கு - மடங்கு

குட்டை கட்டை

முறி - மறி (=வளை)

துளிர் - தளிர்

முள்

மள்

மள்

மள்-மள்ளன் = இளைஞன்.

"பொருவிறல் மள்ள” (திருமுருகு.262)

மழ

“ரகார ழகாரம் குற்றொற் றாகா” (தொல், 49) ஆதலால், மழ் என்னும் வடிவம் தோன்றாது,

மழ

1. g6TMLD.

"மழவும் குழவும் இளமைப் பொருள" (தொல், 796)

2. குழந்தை.

66

'அழுமழப் போலும்” (திருக்கோ. 147)

மழ மழவு = இளமை, குழந்தை.

மழபுலவர் = பள்ளியிற் படிக்கும் சிறார்.

“மையாட லாடன் மழபுலவர் மாறெழுந்து" (பரிபா. 11 : 88) மழமழப்பு மென்மை.

மழலை= இளமை, மென்மொழி, குழந்தைமொழி, புதுமை மழலைத்தேன் = புதுத்தேன்.

மழவன் = 1. இளைஞன் (பிங்.).

"மழவர்த மனையன மணவொலி” (கம்பரா. நாட்டுப் படலம், 50)

2. வீரன் “மழவர் பெரும” (புறம். 90)

மழறுதல் = மென்மையாதல்.

“மழறுதேன் மொழியார்கள்” (திவ். திருவாய்மொழி, 6 : 2 : 5.)

மழ-மாழை = இளமை.

"மாழை மடமான் பிணையியல்” (கலித். 131)