உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மழை - (மழை) - வழை=புதுமை.

"பாகரிறை வழைமது நுகர்பு” (பரிபா, 11 : 66.)

தென்சொற் கட்டுரைகள்

ம வ, மெய்யினத் திரிபு. ஒ.நோ: மிஞ்சு-விஞ்சு.

மழ மழு - மழுக்கை வழுக்கை. வழுக்கைப்பயல் = சிறு பயல். வழுக்கை வழுக்கட்டை = சிறு பிள்ளை. –

வழை – வழைச்சு வழைச்சு = புதுமை.

“சாடியின் வழைச்சற விளைந்த” (பெரும்பா. 280)

புதுமை சிறுமை அழகு வீரம் முதலியன இளமையொடு தொடர் புடைய கருத்துகள். அதனால், இளமையைக் குறிக்கும் சொற்கள் இப் பொருள்களை உணர்த்தின.

மழலை மதலை = குழந்தை மொழி, குழந்தை, மகன்.

=

மதலைக்கிளி இளங்கிளி.

மழ - (மத) - மட மடம் = இளமை, மென்மை, அழகு, அறியாமை. மடமை = 1. மென்மை. “தெளிநடை மடப்பிணை” (புறம். 23)

2. அறியாமை

அறிவு பெரும்பாலும் ஆண்டுப் பெருக்கத்தால் அடையப் பெறுவதால், இளமையில் அறியாமை மிகுந்திருப்பது இயல்பு. இதனால், இளமைச்சொல் அறியாமையை உணர்த்திற்று.

மள் - (மண்) - மணி = சிறியது.

மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணிச்சம்பா, மணிச்சுறா, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்பயல், மணிப்புன்கு, மணிப்புறா, மணிப்பொச்சம், மணியீரல் முதலிய வழக்குகளை நோக்குக.

மண் - மாண் -1, சிறுவன், இளைஞன், மணவாதான் (பிரமசாரி).

“மாணாகி வைய மளந்ததுவும்” (திவ். பெரியதிரு மொழி; 8:10 : 8,)

2. குறள், குறளன்.

"குறுமா ணுருவன் தற்குறியாக் கொண்டாடும்” (தேவாரம் 164 : 5)

மாண் -மாணி = 1. மணவாதான், மாணவன்

“கருமாணி யாயிரந்த கள்வனே” (திவ்.இயற்பா. 2:61) 2. குறள் வடிவம்

(திவ், பெரியாழ்வார் திருமொழி, 1 : 4 : 1 ஸ்வாபதேச வியாக்கியானம்).

3. சிற்றுறுப்பு.