உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?

85

மாணி என்னும் சொல் கன்னடத்திலு முளது. மாண், மாணி என்னும் சொற்கள் வடமொழியி லில்லை.

மாண் - மாணவன் = சிறுவன், கற்போன்.

மாணவன் மாணவகன் = ளைஞன், கற்போன், மணவாதான், சிறுவன், அறிவீனன்.

யாழ்ப்பாண அகராதியில், மாணவகன் என்னும் சொல்லுக்கு 8 முதல் 16 ஆண்டுக்குட்பட்ட சிறுவன் என்னும் பொருள் குறிக்கப்பட்டுளது.

பொதுவாகக் கல்விகற்கும் பருவம் மணத்திற்கு முந்தியதாதலாலும், மணப்பருவம் ஆடவனுக்குப் பதினாறாண்டென்று அகப்பொரு ளிலக்கணங் கூறுவதாலும், 8 ஆண்டு முதல் 16 ஆண்டுவரைப்பட்ட இளைஞனை மாணவகன் என்று அழைப்பது தமிழ்மரபிற்கே மிகப் பொருத்தமாம். இன்றும், வசதியுள்ள ஆடவர்க்கெல்லாம் பதினாறாம் ஆண்டிலேயே மணம் நிகழ்கின்றது. ஆரியமணம் எட்டனுள் ஒன்றான பிரமம் என்பது, "நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது” (தொல். பொருள். 92, உரை) தமிழன் 48 ஆண்டுவரை மணவாதிருத்தல் மிக அரிதாகும். வெப்பநாட்டார் முந்தியும் தட்பநாட்டார் பிந்தியும் மணத்தல் இயற்கை விளைவாகும். இன்றும், மேனாட்டார் பெரும்பாலும் நாற்பதியாண்டு நிரம்பிய பின்னரே மணக்கின்றனர். இந்திய ஆரியரின் முன்னோர் ஆதியில் வடக்கும் வடமேற்குமுள்ள குளிர்நாடுகளிற் குடியிருந்ததினால், அவர்க்கு நாற்பதியாண்டு மணவாதிருக்க முடிந்தது தமிழர்க்கோ இந் நிலை அன்றுமில்லை; இன்றுமில்லை ஆதலால், இளங்கற்றுச்சொல்லியை மாணவகன் என்பது தமிழ்வழக்கேயாகும். மாணவகம் = கல்வி (சிந்தாமணி நிகண்டு)

மாணவன்

(மாணகன்)

(மாணக்கன்) மாணாக்கன்.

மாணவி மாணாக்கி என்பன பெண்பால் வடிவங்கள்.

ண்

மாணவன் மாணவகன் என்னும் ஈர் ஆண் பெயரும் வடமொழியில், முறையே, மாணவ மாணவக என ஈறுகெட்டு வழங்குகின்றன. மாணவிகா என்பது வடமொழிப் பெண்பாற் பெயர். மாணாக்கன் என்னும் ஆண்பால் வடிவமும் மாணவி மாணாக்கி என்னும் பெண்பால் வடிவங்களும் மாணவன் என்பதற்கு அடிவழியான கொடிவழிச் சொற்களும் வடமொழியி லில்லை. னகரவீற்றுத் தமிழ்ப் பெயர்கள் வடமொழியிற் பெரும்பாலும் ஈறுகெட்டு வழங்குவது இயல்பு.

தொல்காப்பியத்திற்கு ஆத்திரேயன் பேராசிரியன் வகுத்த பொதுப்

பாயிரத்தில்,