உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தென்சொற் கட்டுரைகள்

இன்னோ ரன்ன தொன்னெறி மரபினர் பல்பெருஞ் சிறப்பின் நல்லா சிரியர்

உடையோ ராகி நடையறிந் தொழுகுநர்

நன்மா ணாக்கர் என்ப...

எனக் கூறப்பட்டுள்ளது. ஆசிரியன், மாணாக்கன் என்னும் இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களாகும்.

மாணவன், மாணவகன், மாணாக்கன் என்னும் மூவடிவங்களும், தமிழெழுத்துகளாலேயே அமைந்தவை.

ஆரியர் வருமுன்பே தமிழர் கல்வியில் துறைபோயிருந்தனர்.

ஆசிரிய மாணவ மரபில் கல்வி வழங்கிவந்தது.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.'

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கு மீயப் படும்."

என்பவை

பிற்காலத்தவையாயினும்,

உணர்த்துதல் காண்க. இனி,

(குறள். 395)

(குறள். 412)

முற்கால

நிலைமையையும்

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி" சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே."

(lgrou. 1598)

(தொல். 1603)

முதலிய பகுதிகளும், முற்காட்டிய பொதுப்பாயிரப் பகுதியும், ஆசிரிய வாயிற் கல்வியை உணர்த்துதல் காண்க. ஆசிரிய மாணவர் ஆரியர்க்கு முற்பட்ட பண்டைக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்ததினால் அவரைக் குறித்தற்குச் சொற்களும் பழந்தமிழில் இருந்திருத்தல் வேண்டும். கற்போன், கொள்வோன், கோளாளன், கேட்போன் முதலிய மாணவன் பெயர்களும்; கற்பிப்போன், நுவல்வோன், உரைப்போன் முதலிய ஆசிரியன் பெயர் களும்; சூத்திரங்களிலும் செய்யுள்களிலும் மோனையெதுகைக் கேற்றவாறு அமைக்கப்பெறும் பொதுச் சொற்களேயன்றி, மரபு நெறிப்பட்ட சிறப்புச் சொற்களல்ல.

கற்றுச்சொல்லி என்பது இடைக்காலத்தெழுந்த தொடர்மொழிப் பெயர். மாணவன் என்னும் சொல்லின் அமைப்பும் தமிழ்முறைப்பட்டதே. மாண், பகுதி; அவன், விகுதி. ஊனவன், கானவன், வானவன், மீனவன் முதலிய பெயர்களை நோக்குக. இவற்றின் பகுதிகளை ஒருகால் ஊனம், கானம் முதலிய மகர வீற்று வடிவங்களாகக் கொள்ளினும், ஆனவன்