உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?

87

கோனவன் முதலிய பெயர்களின் பகுதிகளை அங்ஙனங் கொள்ள முடியாமை காண்க.

ஆனவர் = இடையர் (அக. நி.).

மாணவகன் என்பது மாணவன் என்பதன் விரித்தல். மாணாக்கன் என்பது மாணவன் என்பதன் திரித்தல். மாணவன் - மாணவி, மாணாக்கன் - மாணாக்கி என ஆண்பாற்பெயர் அன்னீறும், பெண்பாற்பெயர் இகரவீறும் பெற்றிருப்பது, தமிழுக்குச் சிறப்பாம்.

இதுகாறும் கூறியவற்றால், தென்சொற்கு விதிக்கப்பட்ட எழு நிலைமைகளுள் ஆறு (1, 2, 3, 4, 6, 7) மாணவன் என்னும் சொல்லுக்கு ஏற்றல்

காண்க.

வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொற்களே என்னும் குருட்டுக் கொள்கையை நம்பி, வடமொழியிலுள்ள துணையானே தென்சொற்களை யெல்லாம் வடசொற்களென மயங்கற்க. வடமொழிச்சென்று வழங்கும் தென்சொற்கள் பல்லாயிரக்கணக்கின. அவற்றுள் ஒன்று மாணவன் என்பது. தமிழில் சீடன் என்று தற்பவமாகி வழங்கும் சிஷ்ய என்னும் சொல்லே வடசொல்லாகும்.

இதனையும் இதுபோன்ற பிற வுண்மைகளையும் உணர்தற்கு தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் பற்றிய வரலாற்றுண்மைகளை அறிதல் வேண்டும். யாம் அண்மையில் வெளியிடும் முதற்றாய்மொழி, வடமொழி வரலாறு, முதல் நாகரிகம் முதலிய நூல்களுள் அவற்றைப் பரக்கக் கண்டு தெளிக.

- “செந்தமிழ்ச் செல்வி" நவம்பர் 1949

"