உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - அவர்வயின் விதும்பல்

95

'இலங்கிழா-' என்பது உன் அணிகள் போன்றனவல்ல என் அணிகள் என்னுங் குறிப்பினது. பரிமேலழகர் 'நீத்து' என்பதை ‘நீப்ப' எனத் திரித்தும், 'மேல்’ என்பதைக் 'காரிகை' என்னுஞ் சொற்கு முன் நிறுத்தியும், “காதலரை யானிறந்துபடுகின்ற, இன்று மறப்பேனாயின் மறுபிறப்பினுங் காரிகை யென்னை நீப்ப என்றோள்கள் வளை கழல்வனவாம். இவ் வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை யெ-தி யின்புறலாம்; அதனான் மறக்கற் பாலே னல்லேன்" என்று உரை கூறுவர். இங்ஙனம் வலிந்தும் நலிந்தும் கூறும் கொண்டுகூட்டுப் பொருள்கோளுரை அத்துணைச் சிறந்ததன்று.

1263.

உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன்.

(இதுவுமது.)

(இ-ரை.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

இன்ப நுகர்ச் சியை விரும்பாது வலிமையாற் பெறும் போர் வெற்றியை விரும்பி, நம்மைத் துணையாகக் கொள்வதை யிகழ்ந்து ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு போனவர்; வரல் நசைஇ இன்னும் உளேன்

தலால் இன்னும் உயிர் வாழ்ந்திருக்கின்றேன்.

-

திரும்பி வருதலை விரும்பு

அவ் விருப்பம் இல்லையாயின் இதற்குள் இறந்துபட்டிருப்பேன் என்பதாம். ‘உரன்' ஆகுபொருளி. 'நசைஇ' சொல்லிசை யளபெடை.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் னெஞ்சு.

(இதுவுமது.)

(இ-ரை.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி காமம் நீங்கியவரா- நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நம் காதலர் காமங் கூடியவரா- நம்மிடம் திரும்பி வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் உள்ளம் வருத்தம் நீங்கி மேன்மேற் பணைத் தெழுகின்றது.

அந் நினைவின்றேல் இறந்துபடுவேன் என்பதாம். வினைவயிற் பிரியு மிடத்து அதற்குக் தடையாகவுள்ள காமத்தை நோக்காது வினையையே நோக்குதலும், வினை முடிந்தவிடத்துக் காமத்தையே மிகுதியாக நோக்கு தலும், தலைமகனுக் கியல்பாதலின் 'கூடிய காமம்' என்றாள். இதில் ஒடுவுருபு