96
திருக்குறள்
தமிழ் மரபுரை
தொக்கது. கூடிய காமத்தொடு என விரியும். கோடு கிளை, கோடுகொண் டேறுதல் மேன்மேற் கிளைத்தெழுதல். மரத்தின் தொழில் நெஞ்சின்மேலேற்றப் பட்டது. ‘கொடு' கொண்டு என்பதன் தொகுத்தல். இக் குறட்கு,
66
கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப்பெற்றும் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின் மேலேறிப் பாராநின்றது” என்பது மணக் குடவ பரிப்பெருமாளர் உரை.
66
‘கூடிப் பிரிந்த நாயகர் வரும் வழி பார்த்து ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப் பார்க்கும்" என்பது பரிதியார் உரை. கோடு மலை. குவடு கோடு.
1265.
—
காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி னீங்குமென் மென்றோட் பசப்பு.
(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயா-ப் பசக்கற்பாலை
யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.)
(இ-ரை.) கண் ஆரக் கொண்கனைக் காண்க – என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மெல் தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கிவிடும்.
நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' இன்றியமையாத தென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.
1266. வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாங் கெட.
(இதுவுமது.)
(இ-ரை.) கொண்கன் ஒரு நாள் வருக - நீண்ட நாளாக வராத என் காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவாராக; பைதல் நோ- எல்லாம் கெடப் பருகுவன் - வந்தால், எனக்குத் துன்பஞ் செ-கின்ற இக் காமநோ- அடியோடு நீங்குமாறு, அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசை தீரப் பருகி யின்புறுவேன்.