உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ன்பத்துப்பால் - கற்பியல் குறிப்புறிவுறுத்தல்

“இது

99

அதற்குமுன் யான் விரைந்து செல்லவேண்டுமென்பது கருத்தாதலின், விதும்பலாயிற்று. தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக” என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே.

'ஆம்' ஆகும் என்பதன் தொகுத்தல்.

அதி. 128 - குறிப்பறிவுறுத்தல்

அதாவது, தலைமகன், தலைமகள், தோழியாகிய மூவரும் ஒருவர் குறிப்பை யொருவர்க்குச் சொல்லுதல். இது பிரிந்துபோன தலைமகன் திரும்பி வந்தவிடத்து நிகழ்வதாகலின், அவர்வயின் விதும்பலின் பின் வைக்கப் பட்டது.

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க

ணுரைக்க லுறுவதொன் றுண்டு.

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சியவழி அதையவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)

-

(இ-ரை.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாலும்; ஒல்லா கை இகந்து அதற்குடம்படாது உன் கட்டை மீறி; நின் உண்கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு - உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செ-தியுள்ளது. இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.

தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை, அவட் கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு. கரத்தல் நாணாலடக்குதல்.

1272.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

(நாணால் அவள் அது சொல்லாதவிடத்து, அவன் தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு என் கண்ணிற்கு நிறைந்த அழகையும் பச்சை மூங்கிலொத்த தோளையு முடைய என் இளங்காதலிக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்மை நிறைந்த இயல்பு மிகுதியாக வுள்ளது.