உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - புலவிநுணுக்கம்

66

117

'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (தொல். 1013) பரத்தையர் கற்பு நிறை நாண் முதலிய நற்குணங்களின்றிப் பெண்வடிவு மட்டுங் கொண்டவர் என்னுங் கருத்தாற் 'பெண்ணியலார்' என்றாள். பொதுவுண்டல் ஒருங்கு நோக்குதல். இதனாற் பரத்தமை புலவிநுணுக்கத்தில் தலைமகன்மேல் ஏற்றிக் கூறப்படுவதல்லது, உண்மையாக நிகழ்வதன்றென்றும், திருவள்ளுவர் கூறும் இன்பத்துப்பாலிற் குரியதன்றென்றும் அறிந்துகொள்க.

1312.

u

ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.)

(இ-ரை.) ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடு வாழ்க என்பாக்கு அறிந்து அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.

இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செ-ததாகக் கொண்ட தால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரை யாடல் வேண்டியதாயிற்று என்பதாம். 'யாம்' என்றது அரசப் பன்மை (Royal 'we'), அகரந் தொக்கது.

1313.

கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று.

(தலைமகள் புலவிக் குறிப்பைக் கண்டு நீவிர் கூடியொழுகி வரவும், இது நிகழ்தற்குக் கரணகம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.)

(இ-ரை.) கோட்டுப்பூச் சூடினும் இம் மருதநிலத்து நீர்ப்பூவும் கொடிப் பூவுமன்றி வேற்று நிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற் காதலிக்கப்பட்ட வேறொருத்திக்கு இப் பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீரென்று சீற்றங்கொள்வாள் என் காதலி. இத்தகையாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ?

கோட்டுப்பூ மரக்கிளைகளில் மலர்வது. கோடு கிளை. வேற்று நிலம் முல்லை குறிஞ்சி நெ-தல். கோட்டுப்பூவைக் கோடுதலைச் செ-யும் மாலை