உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

திருக்குறள்

தமிழ் மரபுரை






என்றார் பரிமேலழகர். ஆசிரியர் மாலையென்னாது பூவென்றமையாலும், 'கோடுதலைச் செ-யும்' என்னுங் கருத்தில் ஒரு சிறப்பு மின்மையானும், அது உரையன்மை அறிக.

1314. யாரினுங் காதல மென்றேனா வூடினாள்

யாரினும் யாரினு மென்று.

(இதுவுமது)

(இ-ரை) யாரினும் காதலம் என்றேனா - காமவின்பம் நுகர்தற்குரிய இரு வராகிய கணவன் மனைவியர் வேறு யாரினும் நாம் மிகுந்த காதலுடையோம் என்னும் பொருளில், “யாரினுங் காதலம்” என்று சொன்னேனாக; யாரினும் யாரி னும் என்று ஊடினாள் - உன் தலைவி அப் பொருள் கொள்ளாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்பால் மிகுந்த காதலுடையேன் என்று நான் கூறியதாகக் கொண்டு, "யாரைவிட யாரைவிட” என்று வினவிப் புலந்தாள்.

யான் அன்பு மிகுதியால் நல்ல பொருளிற் கூறியதைத் தீய பொருளில் தவறாக உணர்ந்துகொண்டதல்லது, வேறு கரணகமில்லை யென்பதாம். தலை மகள் கொண்ட பொருட்கு 'யார்' உயர்வுப்பன்மை.

1315.

இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்.

(இதுவுமது.)

(இ-ரை.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால். இப் பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம் என்று கூறினேனாக; கண் நிறைநீர் கொண்டனள் அதனால் மறுபிறப்பில் நான் பிரிந்துபோவே னென்று குறித்த தாகக் கருதித் தன் கண் நிறையக் கண்ணீரைப் பெருக்கி விட்டாள்.

நான் சொன்ன வெளிப்படைச் சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டதல்லது என்பால் தவறில்லை யென்பதாம்.

1316. உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

(இதுவுமது.)