உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் ஊடலுவகை

121

'அனைத்து நோக்கினீர் யாருள்ளி' என்றாள். அவளையே பார்த்து மகிழ்தலுங் குற்றமாயிற் றென்பதாம்.

அதி. 133 - ஊடலுவகை

-

அதாவது, அத்தகைய வூடலால் தமக்குக் கூடலின்பஞ் சிறந்தவிடத்து, அச் சிறப்பிற் கேதுவான வூடலைத் தலைமகனுந் தலைமகளும் உவத்தல். உவத்தல் விரும்பி மகிழ்தல். இவ் வதிகாரம் ஊடலுவகையென்று பெயர் பெற் றிருப்பினும்.

"துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று"

(1306)

என்றதனால், புலவிக்கு அடுத்திருப்பதும் துன்பத்திற் கேதுவானதுமான துனி யச்சம் எள்ளளவு மில்லாதிருத்தல் வேண்டுமென்பதுபற்றியே, புலவி யுவ கையை ஊடலுவகையென்று குறித்தாரெனக் கொள்ளலாம். இனி விரைந்து பழுத்துவிடும் பழக்கா-போலப் புலவிநிலை யடையும் ஊடல்முதிர்ச்சி யெனக் கொள்ளினுமாம்.

1321.

இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு.

(தலைமகள் கரணகமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை யென்றாட்கு அவள் சொல்லியது.)

(இ-ரை) அவர்க்குத் தவறு இல்லையாயினும் காதலர்பால் தவறில்லை யாயினும்; அவர் அளிக்கும் ஆறு ஊடுதல் வல்லது அவர் நம்மொடு செ- யும் பேரின்பக் கூட்டம் இங்ஙனம் அவரோ டூடுதலை விளைக்கும் வலிமை யுள்ளதாக விருக்கின்றது.

எல்லையில்லாத இன்பந்தருபவரா யிருத்தலின், யான் பெறும் இப் பேரின்பம் பிற மகளிரும் பெறுவரெனக் கருதி, அது பொறாமையால் இவ் வூடல் நிகழ்கின்ற தென்பதாம். 'அவர்க்கு' வேற்றுமை மயக்கம்; நாலாவது ஏழாவதில் மயங்கிற்று. உம்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.

1322.

ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.

(புலவாக்காலும் அத் தலையளி பெறலாயிருக்க, இப் புலவியால் வருந்துவ

தென்னையென்ற தோழிக்கு அவள் சொல்லியது.)