உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

திருக்குறள்

தமிழ் மரபுரை






(இ-ரை.) ஊடலின் தோன்றும் சிறு துனி ஊடல் கரணகமாக என்கண் தோன்றும் சிறு சடைவினால்; நல் அளி வாடினும் பாடு பெறும் - காதலர் செ-யும் நல்ல தலையளி சற்று வாடுமாயினும் பின்பு பெருமை பெறும்.

தவறில்லாவிடத்து நிகழ்கின்ற வூடல் விரைந்து நீங்குதலின் 'சிறுதுனி' யென்றும், ஆராமைபற்றி நிகழ்தலின் நல்லளி பெரும்பாலும் வாடாதென்பாள் ‘வாடினும்’ என்றும், ஒருகால் சற்று வாடினும் அதனாற் பேரின்பம் விளையுமென்பாள் 'பாடுபெறும்' என்றும் கூறினாள். சிறுதுனியாற் பெரும் பயன் விளைதலின் அது வருத்தமெனப்படாதென்பதாம். தலையளி யென்பது பேரின்பக் கலவிக் கூட்டம். எதிர்மறை யும்மை அருமைப் பொருளது.

1323.

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து.

(இதுவுமது.)

(இ-ரை.) நிலத்தொடு நீர் இயைந்த அன்னாரகத்துப் புலத்தலின் - நிலத் தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலரொடு புலத்தல்போல்; புத்தேள் நாடு உண்டோ - நமக்கு இன்பந் தருவதொரு தேவருலகம் எங்கேனு முண்டோ? இல்லை.

நீர் தான் சேர்ந்த நிலத்தொடு கலத்தல் மட்டுமன்றி அதனியல்பால் திரிதலும் போல, காதலருந் தாம் கூடிய மகளி ரியல்பினராகலான் அதுபற்றி அவரொடு புலவி நிகழுமென்பாள் 'நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து என்றும், அப் புலவி பின்னர்ப் பேரின்பம் பயக்குமென்பாள் 'புலத்தலிற் புத் தேணா டுண்டோ' என்றும், கூறினாள். கூடிய மகளி ரியல்பினராத லென்பது இங்குந் தலைமகள் கருதுகோளேயன்றி உண்மையாக நிகழும் நிகழ்ச்சி யன்றென வறிக.

1324. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை

(அப் புலவி இனி எதனால் நீங்குமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) புல்லி விடாப் புலவியுள் காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக் கேதுவாகிய அப் புலவிக்கண்ணே; என் உள்ளம் உடைக்கும் படை

5