பின்ணிணைப்பு
135
சொல் தென்சொல்லாதற்கு எத்துணையும் இழுக்கில்லை யென்க. அமைதல் நெருங்குதல், அமை நெருக்கம். அமை அமைச்சன், ஒ. நோ: தலை
தலைச்சன், உழையிருந்தான் என்று திருவள்ளுவருங் கூறுதல் காண்க (638). அமைச்சன் - அமாத்ய (வ.)
அரங்கு:
அர் - அறு, அர் - அரை = அறுக்கப்பட்ட பகுதி (-பாதி), அர் - அரங்கு
அறுக்கப்பட்ட
விளையாட்டுக்கட்டம், சூதாட்டுக் கட்டம்.
அறை, அறைவகுக்கப்பட்ட
அரங்கு – அரங்கம் - ரங்க(வ.),
பாண்டி (சில்லாக்கு)
=
அரசு:
104 ஆம் குறளுரையைப் பார்க்க.
உரம் வலிமை.
=
உரவு வலிமை. உரவு
அரவு - அரசு = வலிமை, ஆளும்
ஒ. நோ: உகை அகை, பரவு – பரசு.
அரசு - அரசன் = ஆள்வோன். வேந்தன் என்பது வேந்து என்றும், மன்னன் என்பது மன் என்றும், கோவன் (கோன்) என்பது கோ என்றும், குறும் பன் என்பது குறும்பு என்றும், குறுகி வழங்குவது போல், அரசன் என்பதும் அரசு என்று பாலீறு குன்றி வழங்கும். அரசன் - ராஜன் (வ.), L. rex, regis.
வடவர் ரஜ் என்றொரு செயற்கை முதனிலையைத் தோற்றுவித்து, அதற்கு ஒளிதற் பொருள் கூறி உலகை ஏமாற்றுவர்.
அரண்:
உரம்
அரம் - அரண்
=
வலிய காப்பு, காப்பான கோட்டை, காப்பான
இடம். ஒ. நோ: பரம் - பரண்.
—
அரண் - அரணம் சரண(வ), சரண என்னும் வடசொற்குச் சார்தல் என்று பொருள்படும் சரி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சார் என்னுந் தென்சொல்லின் திரிபே.