158
திருக்குறள்
தமிழ் மரபுரை
158
திருக்குறள்
உடம்பிலி (அசரீரி)
1. திருத்தகு தெ-வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க - விருக்க வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.
தமிழ் மரபுரை
(பொழிப்புரை) உருத்திரசன்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளு வருடன் ஒக்கவிருக்கவென்று வானில் ஓர் உரை யெழுந்தது.
நாமகள்
2. நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.
(பொ-ரை..) பாண்டிய வேந்தே! நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்; இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.
இறையனார்
3. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதா-க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெ-வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன்வா-ச் சொல்.
(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ் செல்லினும் தேன்சொரியுந் தன்மையதான விண்ணக மலர்போலும்.
உக்கிரப்பெருவழுதியார்
4. நான்மறையின் மெ-ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்து வள்ளுவனா-த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவா- வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.
(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை, என் தலை வணங்குக; வா -வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க); செவி கேட்க.