பின்ணிணைப்பு
“வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செ-தவுரை - ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்.
"நிழலருமை வெ-யிலிலே நின்றறிமின் ஈசன்
157
(உமாபதி சிவாசாரியார்)
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போ-.”
8. திருவள்ளுவ மாலை
(ஔவையார்)
இப் பாடற்றிரட்டு, கடைக்கழகப் புலவராற் பாடப்பட்டதன்று. பிற்காலத்து ஆரியச் சார்பான ஒருவரோ ஒருசிலரோ அவர் பெயரிற் பாடிவைத்ததாகும். இதற்குச் சான்றுகள்:
1.
உடம்பிலி (அசரீரி யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.
2. இறையனா ரகப்பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத் திரன்சன்மன் என்னும் மூவாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்க விருக்கவென்று வானுரை யெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.
3. இத் திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவ ரல்லாதவராக இருத்தல்.
4.
5.
6.
7.
8.
திருக்குறள் ஆரிய வேதவழிப் பட்டதாகப் பல பாட்டுகள் கூறுதல்.
பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்ததாக விருத்தல்.
உருத்திரசன்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.
நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.
சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தண ரென்று குறித்திருத்தல்.