164
திருக்குறள்
தமிழ் மரபுரை
ஏழாகவும்; இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, இருபாற் கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேறு பொருளிருப்பினும் அதையறிவார் போலும்!
நாடு அரணுள் அடக்கப்பட்டது.
வெள்ளிவீதியார்
23. செ-யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த பொ-யா மொழிக்கும் பொருளொன்றே - செ-யா வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை யிதற்குரிய ரல்லாதா ரில்.
(பொ-ரை.) ஒருவராலும் இயற்றப்படாத வேதமும் திருவள்ளுவர் இயற் றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.
குறிப்பு: ஆரிய வேதத்தைச் செ-யாமொழி யென்றது ஒரு துணிச்சல் மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும் பொருள் ஒன்றேயென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொ-. இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொ-யாமொழி யென்றமையின், வேதம் பொ-மொழியென்பது எதிர்நிலை யளவையாற் பெறப்படும்.
மாங்குடி மருதனார் ம
24. ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளா- மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளுதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே ம
வள்ளுவர் வா-மொழி மாண்பு.
(பொ-ரை.)
திருவள்ளுவரின்
திருவா-மொழி,
படிப்பதற்கெளிதாயும்
பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்
குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.
எறிச்சலூர் மலாடனார்
25. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக வாய
வறத்துப்பா னால்வகையா வா-ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.