பின்ணிணைப்பு
165
(பொ-ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆ-ந்து பாயிரம் நான்கதிகாரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.
போக்கியார்
26. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதிமூன்
றெண்பொரு ளேழா மிவை.
(பொ-ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந்ததிகார மும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும், பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும், நட்பியல்
பதினேழதிகாரமும்,
பதின்மூன்றதிகாரமுமாக எழுபகுதிகளை யுடையதாம்.
மோசிகீரனார்
27. ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
குடி யியல்
(பொ-ரை.) திருவள்ளுவர் ஆண்பாற் கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
28. ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெ-யாய வேதப் பொருள்விளங்கப் - பொ-யாது
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.
(பொ-ரை.) நான்முகன் திருவள்ளுவனாகி
வடமொழி வேதப்
பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.
மதுரைத் தமிழ்நாகனார்
29. எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா ா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.