பின்ணிணைப்பு
181
6. ஆரிய நால்வரணப் பகுப்பு உலகில் பிராமணருள்ள இந்தியாவில் மட்டு மிருத்தல்.
7. ஆரிய நால்வரணத்திற்கு மூலமான அந்தணர் அரசர் வணிகர் வேளா ளர் என்னும்) தமிழ நாற்பாற் பகுப்புத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டிருந்தமை.
8. அறிவுவளர்ச்சியினால் நால்வரணப் பகுப்புப் படிப்படியாகச் சிதை யுண்டு வருதல்.
இங்ஙனமிருப்பதால், கண்ணபிரான் கடவுளின் தோற்றரவாயின் (அவதார மாயின்), நானே நால்வரணத்தையும் படைத்தேனென்று கூறியிருக்க முடியாது; கூறியிருப்பின் கடவுளின் தோற்றரவா யிருந்திருக்க முடியாது.
க
பகவற்கீதை பதினெண் ணதிகாரங்களையும் எழுநூறு சொலவங் களையும் (சுலோகங்களையும்) உடையது. இதிலடங்கியுள்ள விரிவான செ-தியை ஒரு மெப்பொருளியல் மாநாட்டுத் தலைவர்கூடச் சொல்லி யிருக்க முடியாது. ஒரு மாபெரும் போர்க்களத்தில் இருதிறத்தும் நால் வகைப்படைகளும் அணியமாகிப் போருக்கு முனைந்து நிற்கும் வேளையில். இத்தகைய ஓதுவம் (உபதேசம்) ஒருபக்கப் படையின் முன்னணியில் நடை பெற்றதெனின். அதை நம்புபவன் பரமார்த்தகுரு மாணவனாகவே யிருத்தல் வேண்டும்.
மேலும், அருச்சுனனுக்கும் கண்ணபிரானுக்கும் இடையே நடைபெற்ற உரையாட்டைச் சஞ்சயன் கேட்டுத் திருதராட்டிரனுக்கு அவ்வப்போது அறி வித்தா னென்றிருப்பது, இக்காலத்து ஒலிபெருக்கியும் (Microphone), உரத் நிறைந்த மாநாட்டுச் சொற் பொழி வொன்றை, அவைக்கோடியிலுள்ள ஒருவன் கேட்டு அருகிலுள்ள குருட்டுச் செவிடனுக்கு எடுத்துச் சொல்வது போன்றே இருக்கின்றது.
தொலிப்பான்களும்
(Loudspeakers)
தமிழகத்து இருபெருமதங்களுள் மூத்ததான சிவனியம் (சைவம்) கண்ணபிரானின் தோற்றரவுத் தன்மையை ஒப்புக்கொள்ளவுமில்லை.
பகவற்கீதையின் செ-தி அமைப்பு நடை முதலியவற்றை நோக்கின், கார்பு (Garbe) கூறியுள்ளவாறு, அந் நூல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப் பெற்றதென்று கொள் வதே பொருத்தமாம். அன்றி, கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றியதெனக் கொள்வாரும், அதன்பின்