உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

திருக்குறள்

தமிழ் மரபுரை






மேன்மேலும் விரிவும் திருத்தமும் பெற்று வந்துள்ளமையை மறுக்கமுடியாது. கி.மு. 10ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு போரின் சிறுநிகழ்ச்சியைப் பிற்காலத்துப் பிராமணனொருவன் பயன் படுத்திக்கொண்டு, நால்வரணத்தை நிலைநாட்ட ஒரு பெருமுயற்சி செ-துள்ளான் என்பதே உண்மையான செ-தியாம். பகவற்கீதையிற் கூறப் பட்டுள்ள ஒழுக்கநெறிகளும் மெ-ப் பொருள் விளக்கங்களும் இறந்துபட்ட தமிழ் ஓத்துகளினின்று எடுத்தாண் ட டவையே என அறிக.

13. திருவள்ளுவரின் மெப்பொருள் மேம்பாடு

திருவள்ளுவர் அறிவியலிலும் அரசியலிலும் மட்டுமன்றி, மெ-ப் பொருளியலிலும் மேம்பட்டவராவர், ஆயினும் தமிழர் அவரை அறியாதும் புறக்கணித்தும், இவ் விருபதாம் நூற்றாண்டில் அயலாரும் தமிழ்ப் பகைவரும் இறப்ப இழிந்தாருமான ஆரியரைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.

உலகத்தில் ஒப்புயர்வற்றவரென ஆரியர் பறைசாற்றிவரும் ஆதிசங் கராச்சாரியார் சிவனியம், மாலியம் குமரம், மூத்த பிள்ளையம் (காண பத்தியம்), காளியம், கதிரவம் என்னும் அறுமத நிறுவனராகப் பாராட்டப் படுகின்றார். திருவள்ளுவரின் கடவுள் மதத்தொடு அதை ஒப்புநோக்கின், விண்ணிற்கும் மண்ணிற்கும் இடைப்பட்ட வேற்றுமையாம். சங்கராச்சாரி யாரின் இரண்டன்மை (அத்துவித)க் கொள்கையில் பல்வேறு முரண்பாடு களைக் கொண்டுள்ளமையின், பேதையரே போற்றத்தக்கதாம்.

திருவள்ளுவரின் இருபத்தாறு மெ-ப்பொருட் கொள்கையும். அவர் உயர்வை விளக்கிக்காட்டும்.

14. திருவள்ளுவர் எம் மதத்தார்?

ஆரியத் தெ-வமாகிய நான்முகனை யுட்கொண்ட முத்திருமேனிக் கொள்கையைத் தழுவாமையின், திருவள்ளுவர் வைதிகரல்லர்.

கடவுளில்லையென்றும், பூதங்கள் நான்கேயென்றும், ஒருவர் கொன்ற வுயிரியின் ஊனை இன்னொருவர் உண்ணின் கரிசன்றென்றும் கூறும் பவுத்தக்கொள்கைகளை ஒப்புக்கொள்ளாமையால் திருவள்ளுவர் பவுத்தரல்லர்.

உலகிற்கு ஒரு முதல்வன் வேண்டுவதில்லை யென்றும், இல்லறத்தினும் துறவறம் சிறந்ததென்றும், மகளிர்க்கு வீடுபேறில்லையென்றும், மெ-யுணர் விற்கு இன்றியமையாத 'சுக்கிலத் தியானம்' என்னும் பரமவூழ்கம் இக்காலத்தில்