உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

183

நிகழ்வதில்லையென்றும் கூறும் சமணக் கொள்கைகளை ஒப்புக்கொள் ளாமையால் திருவள்ளுவர் சைனரல்லர்.

கடவுளில்லையென்றும், மெ-ப்பொருள் இருபத்தைந்தேயென்றும், கூறும் சாங்கியக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாமையால் திருவள்ளுவர் சாங்கியரல்லர்.

கடவுள் தோற்றரவு கொள்வாரென்பதையும் உருவ வழிபாட்டையும் ஒப்புக்கொள்ளாமையால், திருவள்ளுவர் மாலியர் (வைணவர்) அல்லர்.

மெ-ப்பொருள் முப்பத்தாறு என்பதையும் உருவ வழிபாட்டையும் ஆரியச் சார்பையும் ஒப்புக்கொள்ளாமையால், திருவள்ளுவர் சிவனியர் (சைவர்) அல்லர்.

66

'ஓது மெழுத்தோ டுயிர்க்கலை மூவஞ்சு

மாதி யெழுத்தவை யைம்பத்தோ டொன்றென்பர்"

(திருமந். 963)

என்னும் ஒன்றே சிவனிய ஆரியச் சார்பைக் காட்டப் போதிய சான்றாம்.

இற்றைச் சிவனியம் மாலியத்தினும் ஆரியம் மிகுந்துள்ளமை, என் 'தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாக விளக்கப் பெறும்.

இனி, திருவள்ளுவர் எம்மதத்தார்தானெனின், தாயுமானவர் 'அங்கிங் கெனாதபடி' யென்னும் கடவுள் வணக்கச் செ-யுளிற் கூறியுள்ளவாறு, கடவுள் மதத்தினர் என்று கூறிவிடுக்க.

15. வீடுபேற்று விளக்கம்

இல்லறத்தாலும் வீடுபெறலாமென்பது தமிழர் மதமும் திருவள்ளுவர்

கொள்கையுமாகும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்,

(38)

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஒ-ப் பெறுவ தெவன்,

(46)

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை,

(47)