உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

திருக்குறள்

தமிழ் மரபுரை






ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை யுடைத்து

என்னுங் குறள்களை நோக்குக.

(48)

துறவறமும் ஒரு குலத்தார்க்குமட்டும் உரியதன்றி எல்லார்க்கும் பொது வாம். அவாவும் செருக்கும் அடியோ டொழிந்தாலொழிய ஒருவன் வீட்டை யடைய முடியாது.

"பே-போல் திரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம்

நா-போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தா-போற் கருதித் தமர்போ லெவருக்குந் தாழ்ச்சிசொல்லிச் செ-போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே."

மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற.

(பட்டினத்தார் பாடல்)

(34)

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை.

(345)

"நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

ஏற்றித் தொழூஉம் எழுகோடி மந்திரம் என்னகண்டா-

ஆற்றைக் கடக்கத் துறைதெரி யாம லலைகின்றையே." (பட்டினத்தார் பாடல்)

ச் செ-யுள்களால், சிறுபிள்ளைபோல் மறுபடியும் பிறந்து செருக் கடங்கி ஆசைவே ரறுத்தவரன்றி, செல்வத் தொடர்புள்ளவரும், ஆரவாரமாக ஆடையணி யணிபவரும், தம்மைப் பிறப்பாற் சிறந்தவராகக் கருதுபவரும் மனமாறாது ஆரிய மந்திரங்களை யோதுபவரும், வடமொழியைத் தேவ மொழியென்றும் தென்மொழியைக் கீழோர்மொழி (நீசபாஷை) யென்றுங் கூறுபவரும், திருக்குறளை ஓதக்கூடாதென்பவரும், வீட்டுலகை யடைவது ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவதினும் அரிதா யிருக்கு மென்று அறிந்து கொள்க.

இனி, விருந்தோம்பாமையால் இல்லறவகையாலும் செருக்கடங் காமையால் துறவறவகையாலும், ஆரியர் வீட்டையடைவதும் இயலாதென அறிந்துகொள்க.

16. இன்பத்துப்பாலின் இருதிறம்