உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் குறிப்பநிதல்

11

முன் தலைமகன் தோழி குறிப்பினையறிதலும், அவள் தலைமக்களிருவர் குறிப்பினையு மறிதலும், இங்குச் சேர்த்துக் கூறப்பட்டுள என அறிக.

தகையணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுவதற்கு அவள் குறிப் பறிதல் இன்றியமையாதாதலின், இது தகையணங்குறுத்தலின் பின்னும் இயற் கைப் புணர்ச்சிக்கு முன்னும் வைக்கப்பட்டது.

1091.

இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோ-நோக் கொன்றந்நோ- மருந்து.

(தலைமகன் தலைமகள் காதற்குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது.)

வளுடைய

(இ-ரை.) இவள் உண்கண் இருநோக்கு உள்ளது மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோ- நோக்கு ஒன்று அந் நோ- மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செ-வது, இன்னொன்று அந் நோ-க்கு மருந்தாவது.

அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோ-நோக்கு தலை மகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக் காதலாகிய கைக்கிளை யாயிருந்த காமநிலை, இன்று இருதலைக் காதலாகிய ஐந்திணையாகப் பெயரத்தொடங்கியமை, இதனாற் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வா-ப்பையுங் கண்டான்.

1092. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது.

(இதுவுமது.)

(இ-ரை.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் – இவள் கண்கள் எனக்குத் தெரியாமல் என்னை மறைவாகப் பார்க்கும் இடுகிய பார்வை; காமத்தில் செம் பாகம் அன்று பெரிது மெ-யுறு புணர்ச்சியில் சரிபாதி யன்று, அதற்கும்

மேம்பட்டதாம்.

தான் நோக்குங்கால் கவிழ்ந்து நிலம் நோக்கியும் தான் நோக்காக்கால் தன்னை நேர் நோக்கியும் வருதலாற் 'களவுகொள்ளும்' என்றும், தன்னை நோக்குவது இடுகியும் நேரங் குறுகியுமிருத்தலால் 'சிறுநோக்கம்' என்றும், அச் சிறுநோக்கம் தன்மேற் காதலை யுணர்த்துதலால் இனிப் புணர்தலுறுதிபற்றிச் 'செம்பாக மன்று பெரிது' என்றுங் கூறினான்.