12
திருக்குறள்
தமிழ் மரபுரை
1093.
நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு எட்டிய நீர்.
(தலைமகள் காதலை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.)
(இ-ரை.) நோக்கினாள் - நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் - அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங்கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலை குனிந்தாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் – அச் செயல் எம் மிருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும்.
யாக்கும் அன்பை யாப்பென்றார். யாப்பைப் பயிராக வுருவகியாமை யின் இது ஒருமருங் குருவகம்.
1094.
யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் தானோக்கி மெல்ல நகும்.
(தலைமகள் காதலை நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) (இ-ரை.) யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நான் அவளை நோக்கும்போது அவள் எதிர்நோக்காது நாணித் தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அதைக் கண்டு நான் அவளை நோக்காதபோது அவள் என்னை நோக்கித் தனக்குள் மகிழ்ந்து புன்னகை செ-வாள்.
1095.
மென்னகையாற் புணர்ச்சி விருப்பம் வெளியாயிற்று.
குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்.
(இதுவுமது.)
(இ-ரை.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால்
என் என்னை முக
நோக்கி உற்றுப்பார்க்காத தன்மையேயன்றி; ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாற் போல என்னை நோக்கிப் பின் தனக் குள்ளே மகிழ்வாள்.
சிறங்கணித்தாள் என்பது எதுகைநோக்கி வலித்தது. சிறங்கணித்தல் வெளிப்படையா- நிகழாமையாற் 'போல' என்றான். நோக்கி என்பது சொல் லெச்சம். இனி இவளை யடைதல் உறுதியென்பது குறிப்பெச்சம்.
இதுவரை கூறப்பட்டது தலைமகன் தலைமகள் குறிப்பினை யறிதல். இனிக் கூறப்படுவன தலைமகன் தோழி குறிப்பினை யறிதலும் தோழி அவ் விருவர் குறிப்பினையு மறிதலுமாம்.