உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - புணர்ச்சி மகிழ்தல்

21

என்பதுபற்றித் தமது என்றும், "ஐம்புலத் தாறோம்பல்" (குறள். 43) பற்றிப் பாத்து' என்றும், வரைவாற் சிறந்த பேறில்லையென்பது தோன்ற அற்று என்றும் கூறினான். 'ஆல்' அசைநிலை. 'அரிவை' என்பது இங்குப் பருவங் குறியாது பெண்மைமட்டும் குறித்து நின்றது.

1108. வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

(இருவர்க்கும் இடையீடு படாத முயக்கு இல்லறத்திலேயே

இயலுமென்று வரைவுகடாவின தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) (நீ சொல்வ தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு ஓருடம் பென்னுமாறு இறுக ஒன்றியமையால் காற்றா லிடையறுக்கப்படாத தழுவல்; வீழும் இருவர்க்கு இனிதே

வர்க்கும் இன்பந் தருவதே.

ஒருவரை யொருவர் விழையும் இரு

தோழி நாளிடையீடு குறித்துச் சொன்னதற்கு மாறாகத் தலைமகன் காற் றிடையீடு குறித்துச் சொல்லியும் அவள் உடம்புபற்றி இருவர் எனக் கொண் டதை அவன் காதல்பற்றி உயிரால் ஒருவர் எனக் கொண்டு மறுத்தும் கோணை யுறழ் (வாதம்) செ-தவாறு. இதனால் வரைவுடம்படாமை தெரிவித்தான். முற்றும்மை செ-யுளால் தொக்கது. ஏகாரம் தேற்றம். 'படாஅ' இசைநிறை யளபெடை. வரைவு கடாதலாவது வெளிப்படையான கரணச் சடங்கொடு இல்லற வாழ்க்கை தொடங்குமாறு வேண்டுதல்.

1109. ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்

கூடியார் பெற்ற பயன்.

(மறைத்தல் வேண்டாமையின் அச்சமின்றியும் நாள்தோறுங் கூடுங் கூட்டமே இன்பஞ் சிறக்குமென வரைவுகடாவியவட்குச் சொல்லியது.)

(இ-ரை.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை பழகப் பழகப் பாலும் புளித்தல்போல நாளடைவில் இன்பங் குன்றிய புணர்ச்சி யினிதாதற் பொருட்டு வேண்டுவதான ஊடலும், அது முதிர்ந்து உள்ளதையுங் கெடுக்காவாறு அளவறிந்து நீக்கலும், அதன்பின் கூடலும் ஆகிய இவையன்றோ; காமம் கூடியார் பெற்ற பயன் வரைந்துகொண்டு காமவின்பஞ் சிறந்தவர் பெற்ற

பயன்கள்.

}