22
திருக்குறள்
தமிழ் மரபுரை
ஆடவர் தத்தம் தொழில்பற்றிப் பிரிந்துபோதலும், அவர் வரவு குறித்த காலங் கடந்தவிடத்துப் பெண்டிர் வருந்துதலும், வந்த பின்பும் ஏதேனு மொன்று கருதிக்கொண்டு ஊடுதலும், அதைக் கணவர் பல்வேறு வகையில் நீக்குதலும், அதன்பின் கணவன் மனைவியர் கூடுதலும் ஆகிய இவைதானே, வரைந்து கொண்ட கற்பொழுக்கத்தார் பெற்ற பயன்! வரையாமையால் அருமைப் படுவதும், மறைவால் இன்பஞ் சிறப்பதும், மேன்மேலும் ஆராமை மீதூர்ந்து இரண்டறக் கலப்பதுமான, இக் களவொழுக்கப் பேரின்பத்திற்கு அக் கற் பொழுக்க வூடலின்பம் எவ்வகையிலும் ஈடாகுமோ? அதை நான் வேண்டேன் என்று அதை இகழ்ந்தவாறு.
1110.
அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு.
(உடன்போக்கில் தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.)
―
(இ-ரை.) சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம் இச்செம்மையான அணிகலன்களை யுடையாளொடு கூடுந்தோறும் நான் பெறுங் காமவின்பம்; அறிதோறு அறியாமை கண்ட அற்று நூல்களாலும் நுண்மதியாலும் பொருள்களை அறியவறிய முன்னை யறியாமை விளங்கித் தோன்றினாற் போலத் தோன்றுகின்றது.
ன்போக்காவது தலைமகள் பெற்றோர் அவளைத் தர இசையாத போது, தலைமகன் அவளைக் கூட்டிக்கொண்டு தன்னூர்க்கேனும் வேற் றூர்க்கேனுஞ் செல்லுதல். அறிவிற் கெல்லையின்மையின் மேன்மேலறிய வறிய முன்னை யறியாமை மிகுந்து தோன்றுவது போல, இன்பத்திற்கும் எல்லையின்மையின் தன் காதலியொடு மேன்மேற் கூடக்கூட முன்னை யின்ப நுகர்ச்சிக்குறைவு விளங்கித் தோன்றுகின்றதென்று, அவள் சிறப்புக் கூறிய வாறு. களவொழுக்கத்திற் பல்வேறு தடைகளால் பன்னாள் தலைமகளைக் கூடப்பெறாது துன்புற்ற தலைமகன் இன்று அத் தடைகள் முற்றும் நீங்கியமை தோன்றச் 'செறிதோறும்' என்றான். 'சேயிழை' அன்மொழித்தொகை. 'ஆல்' அசைநிலை. இப் புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கு முண்டேனும், அது அவள் நாணம்பற்றிக் குறிப்பாக நிகழ்வதல்லது கூற்றாக நிகழாதென அறிக.
அதி. 112. - நலம்புனைந் துரைத்தல்
அதாவது, தலைமகன், தலைமகள் அழகைப் பாராட்டிக் கூறுதல். இது புணர்ச்சி யின்பம் பெற்ற பின்பு அளவில்லா மகிழ்ச்சியொடும் அடக்க வொண்ணா