உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - நலம்புனைந் துரைத்தல்

வுணர்ச்சியொடும் நிகழ்வதாகலின், புணர்ச்சிமகிழ்தலின் பின் வைக்கப்பட்டது.

1111.

நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள்.

(இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது.)

23

(இ-ரை.) அனிச்சமே நன்னீரை - அனிச்சப் பூவே! நீ மோப்பப் குழை யும் நாணமுடைமையால் மற்றெல்லாப் பூவினும் நல்ல தன்மையையுடையை; வாழி – ஆதலால் நீ நீடுவாழ்க! யாம் வீழ்பவள் நின்னினும் மெல்நீரள் ஆனால், எம்மால் விரும்பப்பட்டவளோ உன்னைவிட மெல்லிய தன்மை யுடையவள். இதை இன்றறிந்துகொள்.

நீ

இது காமவின்பத்தின் மகிழ்ச்சி மயக்கத்தால், கேட்குந போலவுங் கிளக்குந போலவும் அஃறிணை மருங்கின் அறைந்தது. இதுபோற் பின் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். 'அனிச்சம்' ஆகுபெயர். இவ் வுலகில் யானே மென்மையிற் சிறந்தேன் என்னும் செருக்கை யினி யொழிவாயாக என்பது குறிப்பு. தழுவலால் ஊற்றினிமையைச் சற்று முன்பு அறிந்தானாகலின், அதைப் பாராட்டினான். இன்னீரள் என்னும் பாடம் சிறந்ததன்று.

1112.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று.

(இடந்தலைப்பாட்டின்கட் சொல்லியது.)

(இ-ரை.) நெஞ்சே - என் நெஞ்சமே! மலர்காணின் தாமரை, குவளை முதலிய மலர்களை நீ கண்டால்; இவள் கண் – யான் ஒருவனே காணப்பெற்ற இவள் கண்களை; பலர் காணும் பூ ஒக்கும் என்று மையாத்தி - எல்லாராலும் எளிதா-க் காணப்படும் பொதுவகையான அப் பூக்கள் ஒக்குமென்று கருதி மயங்கி நிற்கின்றா-, உன் அறிவிருந்தவாறு என்னே!

இது நெஞ்சொடு கிளத்தல். இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைமகள் கண்களை ஒருபுடையொத்த மலர்களைக் காணும் போதெல்லாம் அவற்றின் கண் காதல் செ-துவந்த தலைமகன், இதுபோது அவள் கண்களை மீண்டும் கண்டு அவற்றின் அழகைச் செவ்வையா யறிந்தானாதலின், அம் னாதலின், அம் மலர்களின் ஒவ்வாமை கண்டு ஒத்தனவாகக் கருதிய நெஞ்சை யிகழ்ந்து கூறியவாறு. மை மயக்கம். யாத்தல் - பொருந்துதல்.