24
திருக்குறள்
தமிழ் மரபுரை
1113. முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வே-த்தோ ளவட்கு.
(கூட்டுதற் குடம்பட்ட பாங்கற்குத் தலைமகன் தலைமகள தியல்பு கூறியது.)
(இ-ரை.) வே-த்தோளவட்கு பசுமூங்கில் போலுந் தோளினை யுடையவட்கு; மேனி முறி - உடம்பு மாந்தளிர் நிறமாயிருக்கும்; நாற்றம் வெறி இயல்பான மணம் நறுமணமாயிருக்கும்; உண்கண் வேல் மையூட்டிய கண்கள் வேல்போற் கூராயிருக்கும்.
―
பெயராலும் ஓர் இயல்பு கூறப்பட்டது. 'முறி', 'முறுவல்' ஆகுபெயர்கள். உவமைகள் உருவக வடிவிற் கூறப்பட்டன. இத் துறை உன்னாற் கருதப்பட்ட வளை அறியேனென்று சேட்படுத்திய தோழிக்குத் தலைமகன் சொன்னது மாம்.
1114. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று.
(பாங்கற் கூட்டத்துச் சென்று சார்வான் கூறியது.)
(இ-ரை.) குவளை
―
குவளைப் பூக்கள் தாம்; காணின்
காணுந் தொழிலை யுடையனவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று வினைத்திறத்தால் மாட்சியமைப்பட்ட அணிகலன்களை
இவள்
கண்களை யாம் ஒவ்வேமென்று கருதி; கவிழ்ந்து நிலன் நோக்கும் அந் நாணத்தினாற் குனிந்து நிலத்தை நோக்கும்.
பண்பாலன்றித் தொழிலாலும் ஒவ்வாமையாற் 'காணின்' என்றும், கண் டால் நாணும் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணமுமின்மையாற் செம்மாந்து மேல்நோக்கின என்பது தற்குறிப்பேற்றம். 'மாணிழை’ அன்மொழித்தொகை.
1115.
அனிச்சப்பூக் கால்களையாள் பெ-தா ணுசுப்பிற்கு ப அ
ט
நல்ல படாஅ பறை.
(பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது.)
-
இ-ரை.) அனிச்சப்பூக் கால்களையாள் பெ-தாள் இவள் தன் இடை மென்மையை நோக்காது அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக் கணிந்தாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா – ஆதலால், இனி இவளி டைக்கு மங்கலப் பறைகள் முழங்கா, அமங்கலப் பறைகளே முழங்கும்.