உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

திருக்குறள்

தமிழ் மரபுரை






1118. மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்

யேல்

காதலை வாழி மதி.

(இதுவுமது.)

(இ-ரை.) மதி - வெண்ணிலாவே! மாதர் முகம்போல் ஒளிவிட வல்லை இப் பெண்ணின் முகம்போலத் தே-தல் வளர்தலின்றியும் களங்க மின்றியும் என்றும் ஒருதன்மைத்தா- விளங்க உனக்கு இயலுமாயின்; வாழி - நீ நீடு வாழ்வாயாக!; காதலை அன்று நீயும் என் காதலை யுடையையா

யிருப்பா-.

நீ அங்ஙனம் விளங்கமாட்டாயாதலின், என் வாழ்த்திற்கும் காதற்கும்

உரியையல்லை யென்பதாம்.

1119. மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்

பலர்காணத் தோன்றன் மதி.

(இதுவுமது.)

(இ-ரை.) மதி - திங்களே! மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் இத் தாமரை மலர் போலுங் கண்ணையுடையாளின் முகத்தையொக்க நீ விரும்புவாயானால்; பலர் காணத் தோன்றல் இனியாகிலும் எல்லாருங் காணத் தோன்றாதே, நான்மட்டுங் காணத் தோன்று.

ஏற்கெனவேயுள்ள வடிவு நிலையின்மையுங் களங்கமுமாகிய குற்றங் களுடன், பொதுமகள் முகம்போலப் பலருங்கண் டின்புறுதற் கேதுவான பரத்தைமையுங் கூறியவாறு. பலர் காணத் தோன்றாமை கூடாமையின் முக மொத்த லில்லை யென்பதாம்.

1120.

அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

(உடன்போக்குரைத்த தோழிக்கு அதனருமை கூறி மறுத்தது.)

(இ-ரை.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் அறிஞரால் மென்மைக் குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்ச மலரும் ஓதிமத்தின் நொ-ய து- முடியும் கூட; மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் என் காதலியின் மெல்லிய உள்ளங்கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே.