உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - காதற் சிறப்புரைத்தல்

27

இத்தகைய மென்பாதத்தினள் கூர்ம்பருக்கைக் கற்களும் நீள்வேல் முள்ளும் நெடுகலும் பரவிக் கிடக்கும் வெஞ்சுரத்தை எங்ஙனங் கடப்பாள்? ஆதலால் அக் கருத்தை விட்டுவிடு என்பது குறிப்பு. இது உடன்போக்கு மறுத் தலாயினும், தலைமகளின் அடிநலத்தை யெடுத்துக் கூறுதலால், இதுவும் நலம் புனைந்துரைத்தலேயாம். பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக்கனி போலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலின் பழம் என்றார். இக் குறளிலுள்ள அணி உயர்வுநவிற்சி.

-

அதி. 113 காதற் சிறப்புரைத்தல்

அதாவது, தலைமகன் தன் காதன் மிகுதி கூறுதலும், தலைமகள் தன் காதன் மிகுதி கூறுதலுமாம். இது புணர்ச்சியும் உறுப்புநலனும்பற்றி நிகழ்வதாகலின் புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந் துரைத்தல் என்பவற்றின் பின் வைக்கப்பட்டது. இவ் வதிகாரக் குறள்களுள் முன்னைந்தும் தலைமகன் கூற்றும், பின்னைந்தும் தலைமகள் கூற்றுமாகும்.

1121.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்.

(இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது.)

(இ-ரை.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம் மென்மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர்; பாலொடு தேன் கலந்தது அற்று - பாலுந் தேனுங் கலந்த கலவை போலும்.

பருகக் கூடிய பாலின் குறைந்த இனிமையும், பருகக் கூடாத தேனின் நிறைந்த இனிமையும் கலந்தாற் பருகக் கூடிய சிறந்த இனிமை பெறப்படு தலின் அதை 'வாலெயிற்று நீர்க்கு' உவமமாக்கினான். கலந்ததற்று என்பது கலந்தற்று எனத் தொக்கது. ஏகாரம் தேற்றம், ‘பணிமொழி' அன்மொழித் தொகை. 'எயிறூறிய' இடவேற்றுமைத் தொகை.

1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு.

(பிரிவச்சந் தவிர்த்தது.)

(இ-ரை.) உடம்பொடு உயிர்இடை என்ன - உடம்போடு உயிருக்குள்ள தொடர்புகள் எத்தன்மையன; அன்ன மடந்தையொடு எம் இடை நட்பு - அத் தன்மையனவே இப் பெண்ணோடு எனக்குள்ள தொடர்புகளும்.