36
திருக்குறள்
தமிழ் மரபுரை
36
1140.
திருக்குறள்
யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
தமிழ் மரபுரை
(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து, யான் அறத்தொடு நிற்குமாறு எங்ஙனமென்று நகையாடிய தோழியொடு புலந்து, தலைமகள் சொல்லியது.)
(இ-ரை.) அறிவு இல்லார் – அறிவிலாதார்; யாம் பட்ட தாம் படா ஆறு யாம் பட்ட நோ-களைத் தாம்பட்டு அறியாமையால்; யாம் கண்ணின் காண நகுப் - யாம் காதாற் கேட்குமாறு மட்டுமன்றிக் கண்ணாலுங் காணுமாறு எம்மை நகையாடுவர்.
தோழி அறத்தொடு நின்றமையை அறியாது புலக்கின்றாளாதலின், அவளை அயலாளாக்கிக் கூறினாள். 'கண்ணிற் காண' என்றது முன் கண்டறியாமை யுணர்த்தி நின்றது. இது சேட்படுத்தி நகையாடிய தோழிக்குத் தலை மகன் கூறியதாகவுங் கொள்வர். தலைமகன் கூற்று முன்னரே ஏழாங் குறளொடு முடிந்துவிட்டமையாலும், தோழியின் துணையை இன்றியமையாத தாகக் கொண்ட தலைமகன் அவளை அறிவில்லாளென்று பழித்தல் இயல்பன்மை யானும், அது பொருந்தாதென்க.
அதி. 115 - அலரறிவுறுத்தல்
அதாவது, களவொழுக்கத்தை விரும்பிய தலைமகன் பிறர் கூறும் அலர் தனக்கு நன்மையாக முடிவதைத் தோழிக்கு அறிவுறுத்தலும் வரைவேனும் உடன்போக்கேனும் வேண்டிய தலைமகளும் தோழியும் அவ் வலரைத் தலை மகனுக்கு அறிவுறுத்தலுமாம். இது நாணுத் துறந்தவிடத்து நிகழ்வதாகலின் நாணுத் துறவுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.
1141. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
(அல்லகுறிப் பட்டபின் வந்த தலைமகனைத்
தோழி அலரறிவுறுத்தி வரைவு கடாயவிடத்து, அவன் சொல்லியது.)
(இ-ரை.) அலர் எழ ஆருயிர் நிற்கும் - என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலரா யெழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமை யான வுயிர் அவளைப் பெற்றது போன்று மகிழ்ந்து நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அவ் வுண்மையை என் நற்பேற்றி னால் அலர் கூறும் பலரும் அறியார்.