உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - அலரறிவுறுத்தல்

37

அல்லகுறிப் படுதலாவது, இரவுக்குறிக் காலத்தில் தலைமகன் வரவறிவிக் குங் குறி தற்செயலாக நிகழ்ந்து, தோழியுந் தலைமகளுஞ் சென்று தலை மகனைக் காணாது திரும்புதல்.

உயிரினுஞ் சிறந்ததொன் றின்மையான் 'ஆருயிர்' என்றும்; தன் காத லியைப் பெறாமையால் அவ் வாருயிர் மிகத் துன்புற்று நீங்கும் நிலையி லிருந்தபோது, அலரெழுந்து பெறற்கரியவளை எளியளாக்கி அவளைப் பெறு தற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும்; அதை அலர் கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர்போ மாதலானும் அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பே றாக (Bless- ing in disguise) வா-ந்ததென்றும்; கூறினான். முற்றும்மை செ-யுளால் தொக்கது.

1142. மலரன்ன கண்ணா ளருமை யறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்.

(இதுவுமது.)

(இ-ரை.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

குவளை மலர்

போலுங் கண்ணையுடையாளைப் பெறுதற் கருமையை அறியாது; இவ்வூர் எமக்கு அலர் ஈந்தது - இவ் வூரார் அவளை எளியளாக்கி என்னொடு தொடர்பு படுத்தும் அலரை எனக்கு அளித்துதவினர்.

'அருமை' அல்லகுறிப் பாட்டாலும் பல்வேறு இடையீடுகளாலும் தடைகளாலும் நேர்ந்தது. ஆருயிரளித்த பேருதவிபற்றி ஈந்தது' என்றான். 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர்.

1143. உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

(இதுவுமது.)

-

(இ-ரை.) ஊர் அறிந்த கௌவை உறாதோ யானும் என் காதலியு மாகிய எங்கட்குக் கூட்டமுண்மை இவ் வூரார் அறிதலால் விளைந்த அலர் எனக்கு ஏற்ற தொன்றன்றோ! அதனைப் பெறாது பெற்ற அன்ன நீர்த்து அதைக் கேட்ட நான், அக் கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற் போல இன்புறு தற் கேதுவான தன்மையை அவ் வலர் உடைத்தாகலான்.