இன்பத்துப்பால் - கற்பியல் - கண்விதுப்பழிதல்
1175. படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோ- செ-தவென் கண்.
(இதுவுமது.)
57
(இ-ரை) கடல் ஆற்றாக் காமநோ- செ-த என் கண் - கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செ-த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் அத் தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவா-த் துன்பப்படுகின்றன.
-
வினை விதைத்தவன் வினையறுப்பா னாதலால், என்னைத் துன்புறுத்திய கண்கள் தாமும் துன்புறுகின்றன என்றாள்; காமநோ- காட்சியால் வந்த தனால், கண்ணே அந் நோயைத் தந்ததாகக் கூறினாள். நோயைத் தந்ததாகக் கூறினாள். கண் துன்புறுதலாவது அழுதலும் எரிச்சல் கொள்ளுதலும்.
1176. ஓஓ வினிதே யெமக்கிந்நோ- செ-தகண்
L டாஅ மிதற்பட் டது.
(இதுவுமது.)
(இ-ரை.) எமக்கு இந் நோ செ-த கண் தாம் இதற்பட்டது
—
எமக்கு
இக் காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத் துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஓஒ இனிதே -மிகவும் இனிதாவதே.
துன்பமென்றது தூங்கா தழுதலை. எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது எம் துன்பந் தீர்ந்தாற்போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல்.
அம்' இசைநிறை யளபெடைகள். ஏகாரம் தேற்றம்.
1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
(இதுவுமது.)
―
ஒ’, ‘தா
(இ-ரை.) விழைந்து இழைந்து வேண்டிய அவர்க் கண்ட கண் அன்று விரும்பி உண்ணெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள்; உழந்து உழந்து உள்நீர் அறுக - இன்று தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தித் தம்மகத்துள்ள நீரெல்லாம் வற்றிப்போக!