உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

திருக்குறள்

தமிழ் மரபுரை






அடுக்கு இடைவிடாமைபற்றி வந்தது. சினைவினை முதல்மேல் நின்றது போல, அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல்

நின்றது.

1178.

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்

காணா தமைவில கண்.

(காதலர் பிரிந்து போனாரல்லர், அவர் உடலால் ஆங்கிருப்பினும் உள்ளத்தால் ஈங்குளர். அவரைக் காணுமளவும் ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) பேணாது பெட்டார் உளர்- (ஆம். நீ சொல்வது உண்மைதான்.) நெஞ்சத்தில் நேயங்கொள்ளாது வா-ச்சொல்லால் மட்டும் நம்மை விரும்பி யவர் இங்கேயுள்ளார்; மற்று அவர்க் காணாது கண் அமைவு இல ஆயின் அவ் வுண்மைக்கு மாறாக, என் கண்கள் அவரைக் காணாமையால் அமைதி யில்லாதிருக்கின்றன.

பிரிவாற்றாமை யறிந்தும் பிரிந்துபோனமையாற் 'பேணாது' என்றும், முன்னர் நலம் பாராட்டிப் “பிரியேன், அஞ்சேல்" என்று வன்புறையுங் கூறினா ராகலின் ‘பெட்டார்’ என்றும் கூறினாள். யான் ஆற்றியிருக்கவும் என் கண்கள் அவரைக் காணும் வேட்கை மிகுதியால் ஆற்றாதிருக்கின்றன என்பதாம். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்றும், 'ஓகாரம்' அசைநிலை யென்றுங் கூறுவர். அவர் உண்மையில் இங்கிருந்தால் என் கண்கள் அவரைக் கண்டு அமைதியுற் றிருக்கும் என்பதை ஒழியிசையாகக் கொள்க, 'மற்று' மாற்றுப் பொருளில் வந்தது. 'கொண்கனை' என்பது காலிங்கர் கொண்ட பாடம்.

"இனிக் கொண்கனை யென்று பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணா தமைகின்ற கொண்கனைத் தாங் காணாதமைகின்றன வில்லை. இவ் வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத் துளரோ வென்றுரைக்க" என்னும் பரிமேலழகருரை கொள்ளக்கத் தக்கதே. இதற்கு 'மன்' அசைநிலை யென்பர் அவர்.

1179.

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றன கண்.

(நீயும் ஆற்றி நின் கண்களுந் தூங்குதல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) (இ-ரை.) வாராக்கால் துஞ்சா - காதலர் வராதிருக்கும்போது அவர் வரவு நோக்கி வழிமேல் விழிவைத்துத் தூங்கா; வரின் துஞ்சா - அவர் வந்த பின்போ