உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள்

தமிழ் மரபுரை






(இ-ரை.) காமம் ஒருதலையான் இன்னாது ஆடவன் பெண்டு என்னும் இருபாலுள் காதல் ஒருதலைக்கண் மட்டுமிருப்பின் அது துன்பந் தருவதே யாம்; காப்போல் இருதலையானும் இனிது - காவாட்டுச்சுமை போலே இரு தலையும் அது ஒத்திருந்தவிடத்தே இன்பந்தருவதாம்.

என்னிடத்துள்ள காதல் அவரிடத்து மிருப்பின் இவ்வாறு துன்புறேன் என்பதாம். மூன்றாம் வேற்றுமை ஆனுருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது வேற்றுமை மயக்கம்.

1197.

பருவரலும் பைதலுங் காணான்கொல் காம னொருவர்க ணின்றொழுகு வான்.

(இதுவுமது.)

(இ-ரை.) காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமத்தேவன் காம வின்பம் நுகர்தற்குரிய இருபாலாரிடத்தும் ஒப்பநில்லாது, பெண் பாலாரிடத்து மட்டும் நின்று காதலை யுண்டுபண்ணுவான்; பருவரலும் பைதலும் காணான் கொல் அவர் பசலையுற்றும் படர் மிகுந்தும் துன்புறுதலையும் மனம் நோதலையும் கண்டறியானோ?

எல்லாரிடத்தும் ஒப்பநின்று ஒழுகவேண்டியவன் நடுநிலை திறம்பி யும், காமவினைக்குத் தலைமை பூண்டவன் காம நுகர்ச்சிக்குரிய இருவரிடத்து மன்றி ஒருவரிடத்து மட்டும் காதலை யுண்டுபண்ணிக் கடம்ை தவறியும்

வினையறியாதும், ஆடவரை விட்டுவிட்டு மெல்லியலாரையே இரக்கமின்றி வருத்தியும், கொடுமை செ-து திரிபவனும் ஒரு தெ-வமோ? மாந்தரும் தெ- வமும் ஒருசேரக் கைவிட்டபின் நான் உ-யுமாறென்னை யென்பதாம்.

1198.

வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில்.

(தலைமகனிடத்தினின்று தூதுவராமைபற்றித் தலைமகள் வருந்தியது.)

(இ-ரை.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் தம்மால் விரும்பப்படும் காதலரிடத்து நின்றும் ஓரின்சொல்லளவும் வரப்பெறாதே பிரி வாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல; வன்கணாளர் உலகத்து இல் - வன் னெஞ்சர் இவ் வுலகத்தில் வேறொருவரு மில்லை.