உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ன்பத்துப்பால் - கற்பியல் - தனிப்படர் மிகுதி

67

தொலைவிலுள்ள காதலரிடத்தினின்று வருந் தூதெல்லாம் இக்காலத் தஞ்சல்போலப் பொதுவாக இன்பம் பயக்குமாதலின் 'இன்சொல்' என்றும், பிரிவாற்றுதலோடு தூதின்மை யாற்றுதலுஞ் செ-தலால் ‘வாழ்வாரின் வன்கணா ரில்' என்றுங் கூறினாள். 'பெறாஅ' இசைநிறை யளபெடை. இழிவுசிறப்பும்மை தொக்கது.

1199. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்

டிசையு மினிய செவிக்கு.

(இதுவுமது.)

என்னால் விரும்பப்பட்ட காதலர்

(இ-ரை) நசைஇயார் நல்கார் எனினும்

என்பால் அன்பில்லாதவரே யாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செ-திகளும் என் செவிக்கு

இன்பந்தருவனவாம்.

இழிவுசிறப்பும்மை, அவர் அண்மையில் வருகின்றிலர் என்னும் செ-தி யானும் என்பது படநின்றது. அதுவும் பெற்றிலேன் என்பது கருத்து. 'நசைஇ’ சொல்லிசை யளபெடை. 'இசை' ஆகுபெயர்.

1200. உறாஅர்க் குறுநோ யுரைப்பா- கடலைச்

செறாஅஅ- வாழிய நெஞ்சு.

(தலைமகன் தூதுவரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது.)

-

(இ-ரை) உறாஅர்க்கு உறுநோ- உரைப்பா- நெஞ்சு உன்னோடு உறவு கொள்ளாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்லக்கருதும் நெஞ்சே! கடலைச் செறா- - அவ் வருஞ்செயலை விட்டுவிட்டு உனக்குத் துயர் விளைக்குங் கடலைத் தூர்க்க முயல்வாயாக. அது உனக்கு எளிது; வாழிய - நீ நீடுவாழ்க!

நீ சொல்லக் கருதிய செ-தி நீள்பெரு நோயாதலானும், அதைக் கேட்பார் உறவிலராதலானும் உன் தூது செயற்கரியதும் பயனில் முயற்சியு மாகும். ஆதலால், அதை விட்டுவிட்டுப் பயனுள்ள வேறுவினை ஏதேனும் மேற்கொள்க என்பதாம். நீடு வாழும் நிலைமையில்லாததாகக் கருதி 'வாழிய' என வாழ்த்தி னாள். 'உறா அர்' 'செறா அஅ-' இசைநிறை யளபெடைகள்.

ஆசிரியர் வாழ்நாள் முழுதும் பிரியாத ஒருமனைவி வாழ்க்கையையே இங்கெடுத்துக் கூறுவதாலும், கற்பியலை ஊடலுவகையில் முடிப்பதாலும், இவ்